கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும்- எஸ்.பி அறிவுரை

கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும்- எஸ்.பி அறிவுரை
X

தேனியில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் பொது மக்களுக்கு இலவச மாஸ்க்குகளை எஸ்.பி வழங்கினார்.

தமிழகத்தில் கொரோனா வைரசின் இரண்டாம் அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது. இதன் காரணமாக அரசு சார்பாக மாஸ்க் அணிய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இந்நிலையில் தேனி மாவட்ட காவல்துறை சார்பாக மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் வாகனங்கள் மூலம் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளனர். இதற்காக காவல்துறை வாகனங்கள் மற்றும் ஆட்டோக்கள் தேனி, காமராஜர் பேருந்து நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டு மாவட்ட எஸ்பி., சாய்சரண் தேஜஸ்வி கொடியசைத்து துவக்கி வைத்தார்.

பின்னர் பேருந்து நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளான மதுரை சாலை, மார்கெட் பகுதிக்கு சென்ற மாவட்ட எஸ்பி, மாஸ்க் அணியாதவர்களுக்கு இலவசமாக மாஸ்க்குகளை வழங்கி கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என கூறினார். பின்னர் எஸ்பி., கூறுகையில் மாவட்டத்தில் காவல்துறை சார்பாக 50 க்கு மேற்பட்ட வாகனங்களில் கொரோனா குறித்த விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.

Tags

Next Story