எய்ம்ஸ் உறுப்பினராக ரவீந்திரநாத் போட்டியின்றி தேர்வு

எய்ம்ஸ் உறுப்பினராக  ரவீந்திரநாத் போட்டியின்றி தேர்வு
X

மதுரையில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தேனி தொகுதி எம்பி., ரவீந்திரநாத் போட்டியின்றி ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்காக மக்களவையின் இரண்டு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க கடந்த பிப்ரவரி 12 ம் தேதி பாராளுமன்றத்தில் ஒப்புதல் பெறப்பட்டது. இந்நிலையில் எய்ம்ஸ் உறுப்பினர் பதவிக்கு தேனி எம்.பி. ரவீந்திரநாத், மதுரை எம்.பி வெங்கடேசன், விருதுநகர் எம்.பி மாணிக் தாகூர் ஆகியோர் போட்டியிட்டனர். இந்நிலையில் மதுரை எம்.பி வெங்கடேசன் தனது வேட்பு மனுவை திரும்ப பெற்றுக் கொண்டார். அதனால் தேனி எம்பி ரவீந்திரநாத், விருதுநகர் எம்.பி மாணிக் தாகூர் ஆகியோர் போட்டியின்றி ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இதுகுறித்து தேனி எம்.பி ரவீந்திரநாத் தெரிவிக்கும் போது எய்ம்ஸ் உறுப்பினராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன். உறுப்பினர் என்ற முறையில் தென் மாவட்ட மக்களின் நலனுக்காக எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை விரைவுபடுத்த தேவையான நடவடிக்கை எடுப்பேன் என்று தெரிவித்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!