தேனி மாவட்டம் வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு
வைகை அணை
தேனி மாவட்டம் வைகை அணையில் இருந்து இன்று பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு
தமிழக அரசு உத்தரவுப்படி தேனி மாவட்டம் வைகை அணையில் இருந்து இன்று (04.06.21) பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது.தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ பெரியசாமி , வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் பங்கேற்று பாசனத்திற்கு நீரை திறந்து வைத்தனர். தினசரி விநாடிக்கு 900 கன அடி வீதம் 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது.
இதன் மூலம் மதுரை, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 45,041 ஏக்கர் இருபோக நெல் சாகுபடிக்கான பாசன நிலங்கள் பயன்பெறும்.நிகழ்ச்சியில் தேனி மாவட்ட ஆட்சியர் மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியர்கள் பங்கேற்றனர்.
#இன்ஸ்டாநியூஸ் #தமிழ்நாடு #தகவல் #Instanews #Tamilnadu #information #madurai #Dindigal #ஒபெநிங் #water #இரிகாஷன் #Vaigai #Dam #Thenidistrict #water #irrigation #தேனி #திண்டுக்கல் #வைகைஅணை #தண்ணீர் #திறப்பு
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu