சூடான் பிரச்னையில் இந்தியாவிற்கு உலக நாடுகள் பாராட்டு
சூடான் நாடு ஆஃப்ரிக்காவின் மிகப்பெரிய நாடு. அது வடகிழக்கில் உள்ள சூயஸ் கால்வாய் செல்லும் வழியில் உள்ள சூயஸ் கடல் அருகில் உள்ளது. அந்த நாடு முன்பு நல்ல நிலையில் இருந்தது. ஆஃப்ரிக்காவிற்கு தேவையான மருந்து உற்பத்தியை அங்கிருந்த ஒரே ஒரு ஃபாக்டரி மூலம் கிட்டத்தட்ட முழுவதுமாக சூடான் குறைந்த விலையில் உற்பத்தி செய்து கொடுத்து வந்தது.
அது அமெரிக்கா ஃபார்மசூட்டிகல் மாஃபியாவின் கண்களை உறுத்த, ஒபாமா பின்லேடனுக்கு தேவையான கெமிக்கலை உற்பத்தி செய்வதாக குற்றம் சாட்டியது மட்டுமல்ல 11 ராக்கெட்டுகளை தாக்கி அந்த உற்பற்றிக்கூடத்தை சின்னாபின்னம் ஆக்கியது. அதன் பின்னர் நடந்த ஆய்வில் நடந்த ஆய்வில், அப்படி எந்த ரசாயனமும் இல்லை என்று முடிவானது. அதனால் அமெரிக்கா அதற்கு பெரும் நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என்று ஐ நா சபை முதல் எல்லா நாடுகளையும் கேட்டது.
அதன் பின்னால் அமெரிக்காவின் தூண்டுதலால 2011 நாடு இரண்டாக உடைந்தது. அதில் தெற்கு சூடானில் கச்சா எண்ணெய் வளம் இருந்தது. இப்போது அமெரிக்காவின் தலையீடு எதற்காக என்று புரிந்திருக்குமே?! ஆனால் அது முன்பு ஒன்றாக இருந்த போது, ஆயில் பைப்லைன் அதன் Port of Sudan வழியாக ஏற்றுமதி செய்தது. நாடு உடைந்த பின் தெற்கு சூடானில் எண்ணெய் வளமும், சூடானில் பைப் லைனும், துறைமுகமும் பிரிந்தது.
அதனால் தெற்கு சூடான் கச்சா எண்ணெயை ஏற்றுமதி செய்ய சூடானுக்கு பைப் லைனுக்கு காசு கொடுக்க வேண்டும். சூடான் அதிகம் கேட்பதாக வந்த பிரச்சினையில் இரு நாடுகளுக்கு இடையே பிரச்சினை எழுந்தது.
அதனால் இரு நாடுகளுக்கு இடையே பிரச்சினையால், அமெரிக்காவின் கம்பெனிகள் குறைந்த விலைக்கு லாபம் பெற முடியவில்லை. அதனால் சூடானில் பிரச்சினையை தூண்டி அங்கிருக்கும், ராணுவத்திற்கும், துணை ராணுவத்திற்கும் இடையே பிரச்சினையை விதைத்து, உள் நாட்டு போர் நடக்கிறது. அதில் Sudan Army அரசின் பக்கமும், RSF என்ற Rapid Support Forces போராளிகளின் பக்கமும் உள்ளது.
இந்த போரில் பல நாட்டு மக்கள் சிக்கி கொண்டார்கள். அவர்களை எப்படி மீட்பது என்று வழி தெரியவில்லை. ஏர்போர்ட் இருக்கிறது, ஆனால் செயல்படவில்லை. அதனால் உலகத்தின் ஜாம்பவான் அமெரிக்கா முதல் பலர் கையை பிசைந்து கொண்டிருந்தார்கள். அந்த சூழலில், இந்திய விமானப்படை, தனது விமானப்படையை ஆயுதங்களுடன் அனுப்பி, அங்கே.தாக்குதல் இல்லை என்று உறுதி படுத்திக்கொண்டு, இரவில் விளக்குகள் இல்லாத நேரத்தில், Night Vision மூலம் தரையிறங்கி, நமது கமண்டோ படையின் பாதுகாப்போடு மக்களை மீட்டது. மக்களை விமானத்தில் ஏற்றும் வரை விமானம் இயங்கிய நிலையிலேயே தாயாராக இருந்தது.
வெற்றிகரமாக 600+ மக்களை ஏற்றிக்கொண்டு அதே இரவில் டெல்லி திரும்பியது. அது போலவே, துறை முகங்களில், நமது கப்பல் படை கமாண்டோக்களின் துணையுடன் மேலும் பலரை மீட்டது. உலகில் வல்லரசு நாடுகள் கையை பிசைந்து கொண்டு இருந்த நிலையில், இந்தியாவின் மீட்புப்பணியை உலகமே பாராட்டி வருகிறது. அது மட்டுமல்ல, அதனால் மற்ற நாட்டு பிரஜைகளின் கோரிக்கை வலுக்க, மற்ற நாடுகளும் அதன் பின்னர் தங்கள் மீட்பு பணியை ஆரம்பித்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu