ரேஷன் கடையில கொடுத்த காசு - கவர்மெண்டுக்கே கொடுத்த மூதாட்டி.

தனக்கு கிடைத்ததை தானம் செய்த பாட்டி.

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள சிறிய கிராமத்தைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர் தமிழக அரசு வழங்கிய 2000 ரூபாய் பணத்தினை முதலமைச்சர் நிவாரண நிதிக்காக வழங்கினார்.

தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா சின்னமனூர் அருகே உள்ள சுக்காங்கல்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மூதாட்டி ரத்தனம்மாள் இவரது கணவர் பழனிச்சாமி ஆகிய இருவரும் வசித்து வருகின்றனர்.

தற்போது தமிழகத்தையே உலுக்கி வரும் கொரோனோ நோயால் தமிழக மக்கள் பெரிதளவில் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து உள்ளனர். தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் தமிழக அரசு சார்பில் குடும்ப அட்டை தாரர்களுக்கு தலா ரூபாய். 2000 நிதி உதவி வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் நிவாரண நிதி வழங்கப்பட்டு வந்தது.

கொரோனா நோய்த்தடுப்பு பணிக்காக தமிழக மக்கள் தங்களால் இயன்ற நிதியினை தாராளமாக வழங்குமாறு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில் 71 வயது மூதாட்டியான ரத்தினம்மாள் வயது முதிர்வின் போதும் தங்களுக்கு கிடைத்த கொரோனா நிவாரண நிதியை தமிழக முதலமைச்சர் நிவாரண நிதிக்காக வழங்கினார். இவரது செயலை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.




Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!