கோடை மழை - 15ஆயிரம் வாழை மரங்கள் சேதம்

கோடை மழை - 15ஆயிரம்  வாழை மரங்கள் சேதம்
X

கோடை மழை - 15ஆயிரம் வாழை மரங்கள் சேதம்

தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ததால் வெட்டும் தருவாயில் இருந்த சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் ஒடிந்து விழுந்து சேதமானதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளில் நேற்றிரவு காற்றுடன் கூடிய கனமழை பெய்ததால் ஆங்கூர் பாளையம், சாமாண்டிபுரம் பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் ஒடிந்து விழுந்து சேதமடைந்தன. இதில் கூடலூரைச் சேர்ந்த செல்வேந்திரன் என்பவருக்கு சொந்தமான 15 ஏக்கர் நிலப்பரப்பில் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட செவ்வாழை பயிரிடப்பட்டு வெட்டும் தருவாயில் இருந்தது. நேற்று இரவு அடித்த சூறாவளி காற்றின் வேகம் தாங்காமல் சுமார் 15 ஆயிரம் வாழை மரங்கள் ஒடிந்து நாசமாகின.

இதேபோல் அதே பகுதியை சேர்ந்த ரவிந்தீர பிரபாகரன் என்ற விவசாயிக்கும் சொந்தமான செவ்வாழை மரங்களும் ஒடிந்து விழுந்து பெரும் சேதத்தை விளைவித்தது. வெட்டும் தருவாயில் பலன் தரக்கூடிய நிலையில் இருந்த செவ்வாழை மரங்கள் மழையால் சேதம் ஏற்பட்டதால் கம்பம் பள்ளத்தாக்கு பகுதி விவசாயிகள் மிகுந்த கவலையில் உள்ளனர். எனவே தமிழக அரசு இயற்கை பேரிடரால் பாதிப்படைந்த கம்பம் பகுதி வாழை விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு