கம்பம்: கட்சி வேட்பாளர்கள் மனுத்தாக்கல்

கம்பம்: கட்சி வேட்பாளர்கள் மனுத்தாக்கல்
X

தேனி மாவட்டம் கம்பம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக, திமுக மற்றும் நாம் தமிழர் கட்சியினர் மனுத்தாக்கல் செய்தனர்.

தேனி மாவட்டத்தில் உள்ள 4சட்டமன்ற தொகுதிகளில் திமுக, அதிமுக, அமமுக, நாம் தமிழர் மற்றும் மக்கள் நீதிமய்யம் ஆகிய கட்சிகள் நேரடியாக மோதுகின்றன. இதற்கான வேட்பாளர் பட்டியல் அந்தந்த கட்சியின் தலைமை அறிவித்துள்ளது. இந்நிலையில் கம்பம் சட்டமன்ற தொகுதிக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று நடைபெற்றது.

உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் சக்திவேலிடம் கம்பம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது மனுக்களை தாக்கல் செய்தனர். இதில் திமுக சார்பில் தேனி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் கம்பம் ராமகிருஷ்ணன், அதிமுக சார்பில் தேனி மாவட்ட செயலாளர் சையதுகான், நாம் தமிழர் கட்சி சார்பில் அனீஷ்பாத்திமா ஆகிய 3பேர் தங்களின் ஆதரவாளர்களுடன் தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு உட்பட்டு மனுத்தாக்கல் செய்தனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!