முல்லைபெரியாறு அணையில் கண்காணிப்பு குழு ஆய்வு

முல்லைபெரியாறு அணையில் கண்காணிப்பு குழு ஆய்வு
X

முல்லைபெரியாறு அணையில் கண்காணிப்பு குழு ஆய்வு நடத்தினார்கள்.

கடந்த சில தினங்களாக கேரளாவில் பெய்து வரும் கோடை மழையால் முல்லைப் பெரியாறு அணைக்கு தற்போது நீர்வரத்து ஏற்பட்டுள்ளதால் அணையில் மேற்கொள்ள வேண்டிய பராமரிப்பு பணிகள் குறித்து மத்திய துணை கண்காணிப்புக் குழுவினர் இன்று ஆய்வு நடத்தி வருகின்றனர். இதற்காக தேக்கடியில் உள்ள படகுத் துறை வழியாக ஐவர் குழுவினர் அணைப்பகுதிக்குச் சென்றனர்.

இந்த ஆய்வில், முல்லைப் பெரியாறு பிரதான அணை, பேபி அணை, மதகு பகுதிகள், கேலரிப் பகுதிகள், சுரங்கப் பகுதிகள் உள்ளிட்டவைகள் ஆய்விற்கு உட்படுத்தப்படுகின்றன. மேலும் அணையின் கசிவு நீர் அளவீடு குறித்தும் கணக்கீடு செய்யப்படுகிறது. ஆய்விற்கு துணை கண்காணிப்பு குழுவின் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு, ஆய்வறிக்கையை மூவர் கண்காணிப்புக்குழு தலைவரான மத்திய நீர் வள ஆணைய தலைமைப் பொறியாளர் குல்சன் ராஜ்ஜிற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் மூவர் குழுவினருடன் இணைந்து துணைக் கண்காணிப்பு குழுவினர் நடத்திய ஆய்வுக்கு பிறகு இரண்டு மாதத்திற்கு பிறகு இன்று ஆய்வு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 126.65அடியாக உள்ளது. அணையின் நீர் இருப்பு 3,974மி.கன அடியாக இருக்கிறது. அணைக்கு விநாடிக்கு வரத்துள்ள 100கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

Tags

Next Story
வங்கி தேர்வில் முதலிடம் ராசிபுரம் மாணவனுக்கு வாழ்த்துகள் மலர்ந்த வரவேற்பு..!