மாஸ்க் அணிந்தவர்களுக்கு இனிப்புகள் வழங்கிய இன்ஸ்பெக்டர்

மாஸ்க் அணிந்தவர்களுக்கு இனிப்புகள் வழங்கிய இன்ஸ்பெக்டர்
X

மாஸ்க் அணிந்தவர்களுக்கு இனிப்புகள் வழங்கிய இன்ஸ்பெக்டர்

கம்பத்தில் மாஸ்க் அணிந்து வந்த தொழிலாளர்களுக்கு இனிப்புகளை இன்ஸ்பெக்டர் வழங்கினார்.

கொரோனா இரண்டாம் அலையை தடுக்க தேனி மாவட்டம் கம்பம் வடக்கு போலீசார் சார்பாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தேனி மாவட்டத்திலிருந்து அண்டை மாநிலமான கேரளாவிற்கு ஏல தோட்ட வேலை செய்வதற்காக தினக்கூலியாக ஆயிரக்கணக்கானோர் ஜீப்களில் சென்று வருகின்றனர். இந்நிலையில் தேனி மாவட்டம் கம்பம் மெட்டு வழியாக கேரளா மாநிலத்திற்கு ஜீப்களில் வேலைக்கு செல்லும் வாகனங்களை நிறுத்தி கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி மேற்கொள்ளப்பட்டது.

அப்போது தொழிலாளர்களிடையே கம்பம் வடக்கு இன்ஸ்பெக்டர் சிலைமணி கொரோனா நோய் தொற்று பற்றிய விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினார். மேலும் மாஸ்க் அணிவதன் கட்டாயம் குறித்தும், சமூக இடைவெளியை பின்பற்றுவது குறித்தும் எடுத்துரைத்தார். இதில் வாகனங்களில் பயணம் செய்த தொழிலாளர்கள் மற்றும் ஓட்டுநர் உள்பட 100 சதவீதம் அனைவரும் மாஸ்க் அணிந்து வந்திருந்தனர். தொழிலாளர்களின் விழிப்புணர்வை பாராட்டிய இன்ஸ்பெக்டர் சிலைமணி அவர்களுக்கு இனிப்பு வழங்கி மேலும் ஊக்கப்படுத்தினார்.

Tags

Next Story