தமிழக - கேரள எல்லையில் இன்று முதல் இ-பாஸ்.

தமிழக - கேரள எல்லையில் இன்று முதல் இ-பாஸ்.
X

குமுளி எல்லையில் தமிழக காவல்துறையினர் தீவிர சோதனை

தேனி மாவட்டம் தமிழக-கேரள எல்லையான குமுளி பகுதியில் இன்று முதல் இ.பாஸ் நடைமுறை. தமிழக காவல்துறையினர் தீவிர சோதனை

கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை அடுத்து நாடு முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு பகுதியில் கடந்த 10-ஆம் தேதி முதல் தமிழக அரசால் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் எனவும் கட்டாய முகக்கவசம் அணிவது மற்றும் திருவிழாக்களுக்கு தடை, நேரக் கட்டுப்பாடுகள் மற்றும் மாநிலத்தில் இருந்து மாநிலம் வருவதற்கு இ.பாஸ் நடைமுறை உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக தமிழக-கேரள எல்லையான குமுளி பகுதியில் இன்று முதல் இ.பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கேரளாவில் இருந்து தமிழகத்திற்குள் வருபவர்கள் உரிய இ.பாஸ் வைத்திருந்தால் மட்டுமே தமிழகத்தில் தற்போது காவல்துறையினரால் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அவ்வாறு இல்லாவிடில் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக-கேரள எல்லைப் பகுதியில் சுகாதாரத் துறை சார்பாக மற்றும் வருவாய் துறையின் சார்பாக எந்த ஒரு முகாம்களும் இன்னும் அமைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!