கம்பம் தொகுதி அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

கம்பம் தொகுதி அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு
X

தொட்டம்மன் அணை திட்டத்தை வெற்றி பெற்றவுடன் நிறைவேற்றுவேன் எனக்கூறி கம்பம் தொகுதி அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரித்தார்.

தேனி மாவட்டம் கம்பம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் சையது கான், பொதுமக்களின் தண்ணீர் தேவைக்காக தொட்டம்மன் அணை திட்டத்தை தான் வெற்றி பெற்றவுடன் உடனே நிறைவேற்றுவேன் எனக் கூறி தேனி மாவட்டம் சின்னமனூர் ஒன்றிய பகுதியில் பொதுமக்களிடையே வாக்கு சேகரித்தார். இந்த வாக்கு சேகரிப்பு சின்னமனூர் ஒன்றிய பகுதிகளான எரசக்கநாயக்கனூர், கண்ணிசேர்வைபட்டி, சின்னஓவுலாபுரம், முத்துலாபுரம், ஊத்துப்பட்டி ஆகிய பகுதிகளில் தெருத்தெருவாக வீதிகளில் திறந்த ஜீப்பில் பரப்புரை செய்தார்.

இதற்கிடையே பொதுமக்களிடையே வாக்கு சேகரிக்க வந்த வேட்பாளரை பொதுமக்கள் பட்டாசு வெடித்தும், மேளதாளங்கள் முழங்க கும்ப மரியாதையுடன் உற்சாகமாக பொதுமக்கள் வரவேற்றனர் .இந்நிகழ்வில் அதிமுக ஒன்றிய செயலாளர் விமலேஸ்வரன், கம்பம் எம்எல்ஏ., ஜக்கையன் மற்றும் கூட்டணி கட்சிகளான பாஜக தென்னிந்திய பார்வர்ட் பிளாக் போன்ற கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்துகொண்டு அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சையது கான் அவர்களுக்கு வாக்குகளை சேகரித்தனர்.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!