இளம்பெண் தற்கொலை- வருவாய் கோட்டாட்சியர் விசாரணை

இளம்பெண் தற்கொலை- வருவாய் கோட்டாட்சியர் விசாரணை
X

தேனி மாவட்டம் லோயர் கேம்ப்பில் குடும்ப பிரச்சனை காரணமாக விஷம் குடித்து இளம்பெண் தற்கொலை செய்த சம்பவத்தில் உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகின்றார்.

தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள கருநாக்கமுத்தன் பட்டியைச் சேர்ந்தவர் ரமேஷ் (30), இவருக்கும் பாண்டீஸ்வரி (25) என்பவருக்கும் கடந்த ஐந்தரை ஆண்டுகளுக்கு முன்பாக திருமணம் முடிந்து இரண்டு குழந்தைகள் உள்ளனர். தற்போது ராஜேஷ், தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள லோயர் கேம்ப் பகுதியில் தோப்பு ஒன்றை குத்தகைக்கு எடுத்து அங்கேயே தங்கி விவசாயம் செய்து வருகின்றனர்.இந்நிலையில் ரமேஷ்க்கு மது அருந்தும் பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ரமேஷ், பாண்டீஸ்வரி இடையே அவ்வப்போது சண்டை வந்துள்ளது. இதனிடையே நேற்றிரவு பாண்டீஸ்வரி க்கும் ரமேஷ்க்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் விரக்தி அடைந்த பாண்டீஸ்வரி தோட்டத்திற்கு வைத்திருந்த பூச்சி மருந்தை எடுத்து குடித்துள்ளார்.

இதனை அடுத்து உடனடியாக அந்த பெண்ணை மோட்டார்பைக்கில் தூக்கிக்கொண்டு ரமேஷ் கூடலூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளார். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் அங்கிருந்து கம்பம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக பாண்டீஸ்வரியை கொண்டு சென்றுள்ளார். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.இதனையடுத்து லோயர்கேம்ப் போலீசிற்கு இது குறித்து தகவல் அளிக்கப்பட்டதன் பேரில் விரைந்து வந்த போலீசார் இறந்த பாண்டீஸ்வரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கம்பம் அரசு மருத்துவமனையில் வைத்துள்ளனர். மேலும் இறந்த பாண்டீஸ்வரியை சிகிச்சைக்காக மோட்டார்பைக்கில் கொண்டு வந்த போது அவரது கை,கால்கள் போன்றவற்றில் காயம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து ரமேஷ், பாண்டீஸ்வரி திருமணம் முடிந்து ஐந்தரை ஆண்டுகளே ஆவதால் இந்த வழக்கு ஆர்டிஓ விசாரணைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் சக்திவேல், இளம்பெண் இறப்பு குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!