சிறுபான்மையினருக்கு பாதுகாப்பானது அதிமுக அரசு – அன்வர்ராஜா

சிறுபான்மையினருக்கு பாதுகாப்பானது அதிமுக அரசு – அன்வர்ராஜா
X

தேனி மாவட்டம் கம்பம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் சையது கான் அவர்களை ஆதரித்து முன்னாள் சிறுபான்மை துறை அமைச்சர் அன்வர் ராஜா கம்பம், உத்தமபாளையம், சின்னமனூர் ஆகிய பகுதிகளில் சையதுகானை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்.

இந்தப் பிரச்சாரத்தின் போது இஸ்லாமிய மக்களை நம்முடைய அரசு ஆதரிக்கும் விதமாக காயிதே மில்லத் பெயரில் ஒரு பல்கலைக்கழகத்தை ஆரம்பிக்கப்படும் என்பதை தேர்தல் அறிக்கையில் சேர்த்துள்ளனர் என்று கூறி சிறுபான்மையினருக்கு ஆதரவாகத் தான் நமது அதிமுக அரசு செயல்படுகிறது என்று எடுத்துக் கூறினார். மேலும் சிறுபான்மை இனத்திலிருந்து ஒருவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது நமக்கு பெருமையாக உள்ளது. அதனால் அவரை சட்ட சபைக்கு அனுப்பி வைக்க வேண்டியது நம்முடைய பொறுப்பாகும் என்று கூறி பொதுமக்களிடையே வாக்கு சேகரித்தார்.

இந்த வாக்கு சேகரிப்பின் போது கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜக்கையன் அவர்கள் மற்றும் கூட்டணிக் கட்சியினர் ஆகியோர் கலந்து கொண்டு வாக்கு சேகரித்தனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!