அய்யம்பட்டி ஜல்லிக்கட்டு- சீறிப்பாய்ந்த காளைகள்
தேனி மாவட்டம் அய்யம்பட்டி ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடங்கியது.
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள ஸ்ரீஏழைகாத்தம்மன், ஸ்ரீவல்லடிகர சுவாமி கோவில் திருவிழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டிற்கான ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெற்று வருகிறது. காலை 8 மணிக்கு துவங்கிய போட்டியை மாவட்ட வருவாய் அலுவலர் ரமேஷ் கொடியசைத்து துவக்கி வைத்தார். முன்னதாக ஜல்லிக்கட்டு போட்டிக்கான விதிமுறைகளை அதிகாரிகள் மற்றும் விழா குழுவினர் முன்னிலையில் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். அதனைத் தொடர்ந்து முதலாவதாக கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டு பிறகு ஜல்லிக்கட்டு காளைகள் இறக்கி விடப்பட்டன.
இதில் தேனி, மதுரை, திருச்சி, திண்டுக்கல், தஞ்சாவூர், சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து கொண்டு வரப்பட்ட 600 காளைகள் களம் காண உள்ளன. மாலை 4 மணி வரை நடைபெறும் ஜல்லிக்கட்டில் ஒவ்வொரு 75 நிமிடத்திற்கு ஒருமுறை சுழற்சி முறையில் 50 வீரர்கள் என 300 மாடுபிடி வீரர்கள் போட்டியில் பங்கேற்க உள்ளனர். அய்யம்பட்டி ஜல்லிக்கட்டு போட்டியை இளைஞர்கள், பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் என அனைவரும் குதுாகலத்துடன் கண்டு ரசித்து வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu