தேனி-கொரோனா நோய்த்தொற்று தடுப்பு பணிகள்,நடவடிக்கைகள் குறித்து -அமைச்சர் ஆய்வு

தேனி-கொரோனா நோய்த்தொற்று தடுப்பு பணிகள்,நடவடிக்கைகள் குறித்து  -அமைச்சர் ஆய்வு
X
தேனி மாவட்டத்தில் நடைபெற்று வரும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி ஆய்வு மேற்கொண்டார்.

தேனி மாவட்டத்தில் நடைபெற்று வரும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி ஆய்வு மேற்கொண்டார்.

தேனி மாவட்ட ஆட்சியரின் அலுவலக பெருந்திட்ட வளாகம், ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித்துறை அலுவலக வளாகக் கூட்டரங்கில், கொரோனா வைரஸ் நோய்த்தொற்று தடுப்பு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி தலைமையிலும், போடிநாயக்கனூர் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் தமிழக முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி, கம்பம் சட்டமன்ற உறுப்பினர் என்.இராமகிருஷ்ணன், ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் ஆ.மகாராஜன், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.சரவணக்குமார் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது.


கொரோனா தடுப்பு பணிகள் தொடர்பாக மேற்கொண்ட மற்றும் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்தும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, காவல்துறை, ஊரக வளர்ச்சித்துறை, நகர்ப்புற வளர்ச்சித்துறை, பொதுப்பணித்துறை, தமிழ்நாடு மின்சார வாரியம், உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, கூட்டுறவுத்துறை, தொழிலாளர் நலத்துறை, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் ஆகிய துறை அலுவலர்களுடன் கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.

இக்கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இ.சாய் சரண் தேஜஸ்வி, மாவட்ட வருவாய் அலுவலர் க.ரமேஷ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ஆர்.மணி, பெரியகுளம் சார் ஆட்சியர் டி.சிநேகா, தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.பாலாஜிநாதன், இணை இயக்குநர் (மருத்துவ நலப்பணிகள்) மரு.லட்சுமணன், துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) மரு.எஸ்.செந்தில்குமார், உதவி இயக்குநர்கள் ஊராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள், அனைத்து நகராட்சி ஆணையாளர்கள், துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!