வங்கி உதவி மேலாளருக்கு கொரானோ- வங்கி கிளை மூடல்
தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்று இரண்டாவது அலையாக படு தீவிரமாக பரவி வருகிறது. இதனைத் தொடர்ந்து தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தில் 550க்கு மேற்பட்டோர் கொரோனா உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தேனி - பெரியகுளம் சாலையில் இயங்கி வரும் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த 35வயதுள்ள நபர் உதவி மேலாளராக பணிபுரிந்து வருகிறார். தேனி கே.ஆர்.ஆர் நகரில் வசிக்கும் இவருக்கு காய்ச்சல், உடல் சோர்வு உள்ளிட்ட உபாதைகள் இருந்ததைத் தொடர்ந்து நேற்று முன்தினம் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இந்நிலையில் பரிசோதனை முடிவுகள் இன்று வெளிவந்த நிலையில் உதவி மேலாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து வங்கியில் இருந்து பணியாளர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டு வங்கி மூடப்பட்டு சுகதாரத் துறையினர் கிருமிநாசினி மருந்துகள் தெளித்து சுத்தம் செய்யப்பட்டன. மேலும் வங்கியில் பணியாற்றிய அனைவருக்கும் ரத்தம், சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. பரிசோதனை முடிவுகள் வெளி வந்த பிறகே வங்கி திறக்கப்பட உள்ளன. தொற்று உறுதி செய்யப்பட்ட உதவி மேலாளர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் பணியாற்றிய உதவி மேலாளருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்ட சம்பவத்தால் தேனி மாவட்ட மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu