கலெக்டர் தலைமையில் கொரோனா தடுப்பு ஆய்வுக்கூட்டம் -எம்.பி, எம்.எல்.ஏ பங்கேற்பு

கலெக்டர் தலைமையில் கொரோனா தடுப்பு ஆய்வுக்கூட்டம்  -எம்.பி, எம்.எல்.ஏ பங்கேற்பு
X

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் குறித்து மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறை, ஊரக மற்றும் உள்ளாட்சித்துறை சார்ந்த அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி தலைமையிலும், தேனி பாராளுமன்ற உறுப்பினர் ப.ரவீந்தரநாத், கம்பம் சட்டமன்ற உறுப்பினர் என்.இராமகிருஷ்ணன், ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் ஆ.மகாராஜன் மற்றும் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.சரவணக்குமார் ஆகியோர்கள் முன்னிலையிலும் நடைபெற்றது.

மேலும், மாவட்டத்தில் தற்சமயம் வரை கொரோனா தடுப்பூசி போடப்பட்ட நபர்களின் 67,573 எண்ணிக்கை,தடுப்பூசி இருப்பு மற்றும் ஆக்ஜிஸன் இருப்பு குறித்தும், தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, மாவட்டத்திலுள்ள மருத்துவமனைகளில் புதிதாக ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் ஏற்படுத்துவது குறித்தும் மேலும், மாவட்டத்தில் தற்சமயம் வரை கண்டறியப்பட்டுள்ள 346 நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகளின் மேற்க்கொள்ளப்பட்டு வரும் சுகாதாரம் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் துறை ரிதியாக எடுத்துரைக்கப்பட்டது. குறிப்பாக நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகளில் மருத்துவக் குழுக்கள் அமைத்து, காய்ச்சல் முகாம்கள் மேற்க்கொண்டு, அதன்மூலம் கொரோனா பரிசோதனையை அதிகளவில் மேற்க்கொள்ளப்படுவதும், அப்பகுதிகளில் பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துவதற்கென 14 வயதிற்கு மேற்ப்பட்டவர்களுக்கு நோய்த்தடுப்பு மாத்திரைகள் வழங்கப்பட்டு வருவது குறித்தும், தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களின் விபரம் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.

மாவட்டத்தில் தற்சமயம் வரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நபர்களின் எண்ணிக்கை 25,525 மற்றும் நலம்பெற்று வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 21,936 ஆகியன குறித்தும், அதில் தற்சமயம் சிகிச்சை பெற்றுவருபவர்களின் எண்ணிக்கை 3,337 மற்றும் அவர்களுக்கு பகுதிவாரியாக சிகிச்சை அளிக்கப்படும் மருத்துவமனைகள் விபரம் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.

கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் நலன் கருதி, அவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை மேற்கொள்வதற்கென, மாவட்டத்தில் தற்போது வரை போடிநாயக்கனூர் அரசு பொறியியல் கல்லூரி மாணவர் விடுதி, மாணவியர்கள் விடுதி, தேக்கம்பட்டி அரசு தொழில் நுட்ப கல்லூரி, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் சார்பில் தப்புக்குண்டு மற்றும் வடவீரநாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகள் ஆகியவைகளில் கொரோனா நல மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ள அவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள், உணவு மற்றும் அடிப்படை வசதிகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.

தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களின் செயல்பாடுகள், அதில் சுழற்சி முறையில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள், தூய்மை பணியாளர்களின் எண்ணிக்கை, மருத்துவமனைகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள படுக்கை வசதிகள், கூடுதலாக ஏற்ப்படுத்தப்படவுள்ள படுக்கை வசதி, இருப்பு மருத்துவ உபகரணங்கள், வென்டிலேட்டர் கருவிகள் மற்றும் தேவையான மருத்துவ உபகரணங்கள் ஆகியன குறித்தும் மற்றும் முன்னெச்சாpக்கை நடவடிக்கையாக அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள படுக்கை வசதி, அடிப்படை வசதிகள், மாவட்டத்தில் கட்டுப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வரும் வழிமுறைகள், இப்பணிகளுக்கென நியமிக்கப்பட்டுள்ள தன்னார்வலர்கள் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களிடம் விரிவாக கேட்டறிந்தனர்

இந்த கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இ.சாய்சரண் தேஜஸ்வி, மாவட்ட வருவாய் அலுவலர் க.ரமேஷ், தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.பாலாஜிநாதன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் .மணி, இணை இயக்குநர் (மருத்துவ நலப்பணிகள்) மரு.லெட்சுமணன், துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) மரு.செந்தில்குமார், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) காளியப்பன் உட்பட துறைசார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
டெல்லி டூ அமெரிக்கா அரை மணி நேரத்துலயா? என்னப்பா சொல்ற எலான் மஸ்க்..! | Delhi to America Flight Timings