துப்பாக்கி பாதுகாப்புடன் குதிரையில் பயணம் செய்த வாக்குப்பதிவு இயந்திரங்கள்

துப்பாக்கி பாதுகாப்புடன் குதிரையில் பயணம் செய்த வாக்குப்பதிவு இயந்திரங்கள்
X

ஃபைல்  படம் 

சாலை வசதி இல்லாத மலை பகுதி வாக்குச் சாவடிக்கு குதிரை மூலமாக வாக்கு பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டன.

போடிநாயக்கனுார் அருகே மலை கிராமத்திற்கு குதிரைகள் மூலம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டன.

தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதியில் கொட்டகுடி, குரங்கணி, கொழுக்குமலை, காரிப்பட்டி, போடிமெட்டு, அகமலை, ஊரடி-ஊத்துக்காடு, அலங்காரம், முந்தல் காலனி ஆகிய மலைக்கிராமங்களில் தேர்தலை முன்னிட்டு வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 5 ஆயிரத்து 314 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

இதில் சென்ட்ரல் ஸ்டேசன் மலை கிராம வாக்குச்சாவடிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் குரங்கணி மலை கிராமத்திற்கு லாரி மூலம் கொண்டு வரப்பட்டு பின்னர் குதிரைகள் மூலம் சென்ட்ரல் ஸ்டேசன் வாக்குச்சாவடிக்கு கொண்டு செல்லப்பட்டது. இப்பகுதி நக்சல் தடுப்பு பிரிவு போலீஸாரின் கண்காணிப்பில் உள்ளதால் பலத்த பாதுகாப்புடன் இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டன. வாக்குப்பதிவு இயந்திரத்துடன் வாக்குச்சாவடி அலுவலர்களும், துப்பாக்கி ஏந்திய போலீஸாரும், நக்சல் தடுப்பு பிரிவு போலீஸாரும் உடன் சென்றனர்.

Tags

Next Story
ai solutions for small business