தங்கதமிழ்செல்வன் சுயநலமானவர் - ஓபிஆர் குற்றச்சாட்டு

தங்கதமிழ்செல்வன் சுயநலமானவர் - ஓபிஆர் குற்றச்சாட்டு
X

சுயநலமானவர் தங்கதமிழ்செல்வன் என ஓபி ரவீந்திரநாத் குற்றம் சாட்டினார்.

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பாக மூன்றாவது முறையாக தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் போட்டியிடுகிறார். திமுக சார்பாக தங்க தமிழ் செல்வன் போட்டியிடுகிறார். இந்நிலையில் தேனி தொகுதி எம்.பி., ரவீந்திரநாத் போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மாரியம்மன் கோவில்பட்டியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில்,

தங்க தமிழ்செல்வன் தன் தொகுதி மக்களுக்கு செய்ய வேண்டிய திட்டங்களை செய்யாமல் தன் சுயலாபத்திற்காக வேறு கட்சிக்கு தாவினார். அங்கு ஒன்றும் ஆகவில்லை என தெரிந்தவுடன் தற்போது வேறு கட்சிக்கு தாவிவிட்டார். அவர் ஒரு சுயநலம் பிடித்த வேட்பாளர். தகுதி நீக்கம் செய்யப்பட்ட தங்கத்தமிழ்செல்வன் மீண்டும் ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடாமல் பாராளுமன்ற தேர்தலில் எனக்கு எதிராக போட்டியிட்டார்.

தற்போது துணை முதல்வரை தோற்கடிக்க வேண்டும் என எதிர்த்து போட்டியிடுகிறார். அவர் சேவை செய்ய வேண்டும் என போட்டியிடவில்லை. சுய லாபத்திற்காகவே போடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார் என கூறினார்.அதனை தொடர்ந்து முத்துதேவன்பட்டி, வயல்பட்டி, வீரபாண்டி, கொடுவிலார்பட்டி ஆகிய பகுதிகளில் துணை முதல்வருக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டார்.

Tags

Next Story
ai in future agriculture