/* */

கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தல்: மடக்கிய அதிகாரிகளை கொல்ல முயற்சி

தேனி அருகே கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்திச் சென்ற ஜீப்பை மறித்த வருவாய்த்துறை அதிகாரிகள் மீது வாகனத்தை ஏற்றி கொல்ல முயற்சி

HIGHLIGHTS

கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தல்:  மடக்கிய அதிகாரிகளை கொல்ல முயற்சி
X

பள்ளத்தில் கவிழ்ந்த ஜீப்பில் இருந்து ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது

தேனி மாவட்டம், போடி மெட்டு சாலை முனீஸ்வரன் கோவில் அருகே இன்று அதிகாலையில் உத்தமபாளையம் பறக்கும் படை துணை வட்டாட்சியர் கண்ணன் தலைமையில் வருவாய்த்துறை அதிகாரிகள் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த ஜீப்பை மறித்தபோது, வாகனத்தை ஓட்டி வந்த டிரைவர் அதிகாரிகள் குழுவினர் மீது ஜீப்பை ஏற்றி கொல்ல முயற்சித்துள்ளார். சுதாரித்துக்கொண்ட அதிகாரிகள் குழுவினர் பின்னோக்கி நகர்ந்ததால் உயிர் தப்பித்தனர்.

பின்னர் அதிகாரிகள் மற்றொரு வாகனத்தில் பின் தொடர்ந்து விரட்டிச் சென்றபோது, ஜீப் டிரைவர் ஓடிக்கொண்டிருந்த வாகனத்திலிருந்து கீழே குதித்து தப்பி ஓடிவிட்டார். ஜீப் அந்தப் பகுதியில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது.

அதிகாரிகள் குழுவினர் ஜீப்பில் சோதனை செய்தபோது.அதில் கேரளாவுக்கு கடத்தி செல்ல இருந்த 1500 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து உத்தமபாளையம் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தச் சம்பவம் தேனி மாவட்டத்தில் அதிகாரிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Updated On: 26 March 2022 6:47 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மும்பை அருகே குடிபோதையில் பெண்கள் அமளி!
  2. லைஃப்ஸ்டைல்
    காற்றுக்காதலனின் அணைப்பால், மேக காதலியின் ஆனந்தக்கண்ணீர், மழை..!
  3. நாமக்கல்
    10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் நாமக்கல் குறிஞ்சி பள்ளி மாணவர்கள் சாதனை
  4. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் 8.400 கிலோ கஞ்சா பறிமுதல் ; தந்தை, மகன் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    மனமே உனக்கான நண்பனும் எதிரியும்..!
  6. மேட்டுப்பாளையம்
    கல்லாறு சோதனை சாவடியில் தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா, இ-பாஸ் ஆய்வு..!
  7. அருப்புக்கோட்டை
    காரியாபட்டியில், திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு..!
  8. ஈரோடு
    ஈரோடு மாவட்டம் 10ம் வகுப்பில் 95.08 சதவீதம் தேர்ச்சி: மாநில அளவில்...
  9. பூந்தமல்லி
    திருவேற்காடு அருகே பூட்டி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனம் திருட்டு
  10. காஞ்சிபுரம்
    பேராசிரியர் ஆவது எனது விருப்பம் : அரசுப்பள்ளி மாணவன்...!