துணைமுதல்வர் அலுவலகம் அருகே ஐடி ரெய்டு

துணைமுதல்வர் அலுவலகம் அருகே ஐடி ரெய்டு
X

போடியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் அலுவலகம் அருகே வருமானவரித்துறையினர் சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சுப்புராஜ் நகர் பகுதியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்திற்கு அருகில் வசித்து வருபவர் குறிஞ்சி மணி. தேனி மாவட்ட அம்மா பேரவை பொருளாளராக உள்ள இவரது இல்லத்தில் இன்று காலையில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். மதுரை மண்டல உதவி இயக்குநர் பூவலிங்கம் தலைமையிலான வருமான வரித்துறையினருடன் தேர்தல் பறக்கும் படையினரும் இணைந்து சோதனை நடத்தினர்.

சுமார் மூன்று மணி நேரம் நடத்திய சோதனையில் பணமோ முக்கிய ஆவணங்கள் ஏதும் கைப்பற்றபடவில்லை என சோதனை முடிவில் தெரிய வந்தது. துணை முதல்வர் அலுவலகத்திற்கு அருகே வருமான வரித்துறையினர் சோதனை நடத்திய சம்பவம் போடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்