இட்லி, பூரி சுட்டு வாக்கு சேகரித்த தங்கதமிழ்செல்வன்

இட்லி, பூரி சுட்டு வாக்கு சேகரித்த தங்கதமிழ்செல்வன்
X

தேனியில் ஹோட்டலில் இட்லி, பூரி சுட்டு திமுக வேட்பாளர் தங்கதமிழ்செல்வன் வாக்கு சேகரித்து வருகிறார்.

தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. இதில் நட்சத்திர தொகுதியான தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தங்கதமிழ்செல்வன், வீதி, வீதியாக சென்று வாக்கு சேகரிப்பதோடு மட்டுமல்லாது அங்கு பணிபுரியும் தொழிலாளர்களுடன் இணைந்து வேலை செய்தும் வாக்கு சேகரிப்பில் அசத்தி வருகிறார். இந்நிலையில் இன்று காலைல் போடி பெருமாள் கோவில் தெரு, கீழத்தெரு அம்மாகுளம் உள்ளிட்ட இடங்களில் திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

முன்னதாக அப்பகுதியில் உள்ள காளியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார். இதனிடையே அப்பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் சென்று உணவு தயார் செய்யும் தொழிலாளி உடன் இணைந்து இட்லி, பூரி சுட்டு உணவு தயார் செய்து வாக்கு சேகரித்தார். இந்த வாக்கு சேகரிப்பில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா