திமுகவின் தேர்தல் அறிக்கை ஒரு கள்ள நோட்டு - ஓபிஎஸ்
அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தொகுதியில் மூன்றாவது முறையாக போட்டியிடுகின்றார். இதற்காக தொகுதிக்குட்பட்ட நகர், பேரூர் மற்றும் ஒன்றியப்பகுதிகளில் அவர், தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றார்.
இந்நிலையில் வீரபாண்டி பேரூராட்சிக்குட்பட்ட மாரியம்மன் கோவில்பட்டி, திருச்செந்தூர், முத்துத்தேவன்பட்டி, வீரபாண்டி, வயல்பட்டி மற்றும் சத்திரப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் இன்று காலையில் பரப்புரை செய்தார்.
அப்போது முத்துத்தேவன்பட்டி பகுதியில் துணை முதல்வர் ஓ.பி.எஸ் ஆரம்பித்ததும், அங்கு கூடியிருந்த மாணவர்கள் அவரது வாகனத்தை நெருங்கி வருவதை அறிந்தவர், கொஞ்சம் பொறுங்க! நீங்க எல்லாம் என்ன சொல்ல வர்றீங்க! எல்லாம் ஆல் பாஸ்! தான!, கொஞ்சம் இருங்க முதல்ல பேசிக்கிறேன் எனக்கூறி பேச ஆரம்பித்தார்.
அப்போது பேசிய ஓ.பி.எஸ், தமிழகத்தில்; காங்கிரஸ், திமுக ஆட்சி காலத்தை விட அதிமுக ஆட்சி காலத்தில் தான் மக்கள் நலத்திட்டங்கள் செயல் படுத்தப்பட்டுள்ளன.
கடந்த 2006 & 11முதல் ஆட்சி செய்த திமுக தேர்தல் அறிக்கையாக குறிப்பிட்ட 2ஏக்கர் நிலம் வழங்கப்படவில்லை. இதனை சட்டமன்றத்தில் அப்போதைய முதல்வராக இருந்த கருணாநதியிடம் நான் கேட்டதற்கு, 2ஏக்கர் எல்லாம் கொடுக்க முடியாது, கையளவு நிலம் தான் கொடுப்பேன் என கோபமாகக் கூறிச் சென்றார்.
ஆனால் அந்த கையளவு நிலம் கூட யாருக்கும் வழங்கப்பட வில்லை. தற்போதும் தேர்தல் வாக்குறுதிகளாக பலவற்றை தெரிவித்து வரும் திமுகவின் அறிக்கையோ ஒரு கள்ள நோட்டு! ஆனால் அதிமுகவின் தேர்தல் அறிக்கையோ நல்ல நோட்டு! போன்றது எனக் கூறி வாக்கு சேகரித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu