திமுக தேர்தல் அறிக்கை செல்லாத நோட்டு-ஓ.பன்னீர்செல்வம்
திமுக தேர்தல் அறிக்கை செல்லாத நோட்டு என துணைமுதல்வர் ஓபிஎஸ் பரப்புரையின் போது கூறினார்.
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதியில் மூன்றாவது முறையாக போட்டியிடும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றார். தேனி ஒன்றியத்திற்கு உட்பட்ட கொடுவிலார்பட்டி, சிவலிங்கநாயக்கன்பட்டி, பாலகிருஷ்ணாபுரம், சங்ககோணம்பட்டி, அம்பாசமுத்திரம், கோவிந்தநகரம், உள்ளிட்ட 15கிராமங்களில் இன்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பரப்புரை செய்தார். முன்னதாக கொடுவிலார்பட்டியில் உள்ள இராமலிங்க சௌடாம்பிகை அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்த ஓ.பி.எஸ் பின்னர் பரப்புரையை துவக்கினார்.
அப்போது பேசிய அவர், அதிமுக அரசின் திட்டங்களை பட்டியிலிட்டார். அதே போல கடந்த 2006 – 11வரை ஆட்சி செய்த திமுக, தேர்தல் வாக்குறுதியாக அறிவித்த 2 ஏக்கர் நிலத்தை மக்களுக்கு வழங்காமல் ஏமாற்றியுள்ளது. மேலும் தற்போதும் தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்து வரும் திமுகவின் தேர்தல் அறிக்கையானது, ஒரு பொய்யான அறிக்கை, அது செல்லாத நோட்டு. ஆனால் அதிமுகவின் தேர்தல் அறிக்கையோ நிறைவேற்றப்பட்ட அறிக்கை என்று கூறினார்.
மேலும் கடந்த 2011 மற்றும் 2016 ஆம் ஆண்டு தேர்தலின் போது போடிநாயக்கனூர் தொகுதி மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை தான், நிறைவேற்றியிருப்பதாகவும், எனவே மூன்றாவது முறையாக போடி தொகுதியில் போட்டியிடும் என்னை மக்கள் அமோக வெற்றி பெறச் செய்ய வேண்டும் எனக் கூறி வாக்கு சேகரித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu