போடிமெட்டு மலைச்சாலையில் சரிந்து விழுந்த மரங்கள்: சரி செய்த காவல்துறையினர்

போடிமெட்டு மலைச்சாலையில் சாய்ந்து விழுந்த மரங்களை காவல்துறை பேரிடர் மீட்பு குழுவினர் உடனுக்குடன் அகற்றினர்.
அரபிக் கடலில் ஏற்பட்டுள்ள புயல் காரணமாக போடி பகுதியில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதலே லேசான மழையும், கனமழையும் என மாறி மாறி பெய்து வந்தது. போடிமெட்டு மற்றும் குரங்கணி உள்ளிட்ட மலைப்பகுதியிகளில் கனமழை பெய்தது. இதனால் போடிமெட்டு மலைச்சாலையில் சில இடங்களில் சாலையோரம் இருந்த மரங்கள் சாய்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மழையை கண்காணிக்கவும், உடனுக்குடன் தேவையான நடவடிக்கை எடுக்கவும் போடி டி.எஸ்.பி. பார்த்திபன் தலைமையில் பேரிடர் மீட்பு குழு காவல்துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்தது. இந்தக் குழுவினர் உடனடியாக போடிமெட்டு மலைச்சாலையில் விழுந்த மரங்களை வெட்டி அகற்றினர்.
மலைச்சாலையில் சில இடங்களில் லேசான மண் சரிவும் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே ஆகாயப் பாறை பகுதியில் பாறை சரிவு ஏற்பட்ட பகுதியில் சீரமைப்பு பணி தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் கனரக வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை. தற்போது பெய்து வரும் மழையால் மண் சரிவு, மரங்கள் சாயும் நிலையில் வாகனங்கள் கவனமாக செல்லஅறிவுறுத்தப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu