ஜனநாயக கடமையாற்றிய போடி தொகுதி வேட்பாளர்கள்

நட்சத்திர தொகுதியான போடிநாயக்கனூரில் போட்டியிடும் திமுக, அதிமுக அமமுக மற்றும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் தங்களது வாக்கினை செலுத்தி ஜனநாயக கடமையாற்றினார்.

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் நட்சத்திர தொகுதியாக பார்க்கப்படுவது தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தொகுதி.இந்த தொகுதியில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதலமைச்சரருமான ஓ.பன்னீர்செல்வம் மூன்றாவது முறையாக அதிமுக சார்பில் போட்டியிடுகிறார்.

அதேபோல திமுக சார்பில் தேனி வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தங்கதமிழ்செல்வன் முதல் முறையாக போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த நிலையில் இன்று தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருவதால் வேட்பாளர்கள் அவரவர் சொந்த ஊர்களில் தங்களது வாக்கினை செலுத்தி ஜனநாயக கடமையாற்றினார்.

முதலாவதாக தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது சொந்த ஊரான பெரியகுளத்தில், தென்கரை பகுதியில் உள்ள செவன்த்டே நர்சரி பள்ளியில் தனது குடும்பத்தினருடன் வந்து வாக்களித்து ஜனநாயக கடமையாற்றினார்.

திமுக வேட்பாளர் தங்க தமிழ்செல்வன் கம்பம் அருகே நாராயணத்தேவன்பட்டியில் உள்ள அரசு கள்ளர் பள்ளியில் வாக்குப்பதிவு செய்தார். இதேபோன்று அமமுக வேட்பாளர் முத்துசாமி தனது சொந்த ஊரான சின்னமனூர் அருகே உள்ள மேலப்பூலானந்தபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் பதிவு செய்தார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் போடிநாயக்கனூர் 15வது வார்டு நகங பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் தனது வாக்கினைப் பதிவு செய்தார்.

Tags

Next Story
ai marketing future