ஆட்டோ – கார் மோதி விபத்து- சிறுவன் உள்பட இருவர் பலி

ஆட்டோ – கார்  மோதி விபத்து- சிறுவன் உள்பட இருவர் பலி
X

தேனி மாவட்டம் போடி அருகே கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் ஆட்டோ – கார் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 12வயது சிறுவன் உள்பட இருவர் பலியானார்கள்.

தேனி மாவட்டம் போடி புதூர் பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவர் மகன் அரவிந்த்(26) என்ற வாலிபரும், அதே பகுதியை சேர்ந்த காமராஜ் மகன் யோகேஸ்வரன் என்ற 12வயது சிறுவனும் ஆட்டோவில் முந்தல் பகுதிக்கு சவாரி சென்றுள்ளனர். கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் முந்தல் பகுதியில் இருந்து போடிக்கு திரும்பும் போது, எதிர் திசையில் கேரளா நோக்கி வந்து கொண்டிருந்த சென்னை போரூர் பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்பவர் வந்த கார், ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் ஆட்டோவில் வந்த ஓட்டுனர் அரவிந்த் மற்றும் சிறுவன் யோகேஸ்வரன் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இது குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குரங்கணி போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக போடி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா