ஓ.பி.எஸ்க்காக பாடி வாக்கு சேகரித்த நடிகர் கார்த்திக்

ஓ.பி.எஸ்க்காக பாடி வாக்கு சேகரித்த  நடிகர் கார்த்திக்
X
உன்னை அறிந்தால்! நீ உன்னை அறிந்தால்! உலககத்தில் போராடலாம்! என எம்.ஜி.ஆரின் பாடலை பாடி, துணை முதல்வர் ஓ.பி.எஸ்க்காக போடியில் பரப்புரை செய்த நடிகர் கார்த்திக்.

அதிமுக ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதியில் மூன்றாவது முறையாக போட்டியிடுகின்றார். தொடர் வெற்றி பெறுவதற்காக ஓ.பி.எஸ் ஒருபுறம் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் கூட்டணி கட்சித் தலைவர்கள், அதிமுகவின் திரை நட்சத்திரங்கள் என பலரும் அவருக்கு ஆதரவாக பரப்புரை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகரும், மக்கள் உரிமைகள் காக்கும் கட்சியின் தலைவருமான கார்த்திக் நேற்று போடி நகர் பகுதி, கோடாங்கிபட்டி, பத்ரகாளிபுரம் மற்றும் விசுவாசபுரம் உள்ளிட்ட போடிநாயக்கனூர் தெகுதிக்கு உட்பட்ட பகுதிகளில்; துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டார். முன்னதாக கோடாங்கிபட்டியில் பேசிய நடிகர் கார்த்திக்,

நமது துணை முதல்வரை, நான் இணை முதல்வர் என்று தான் கூறுவேன், மேலும் அவரது பெயரைக் கூட சொல்லி இங்கு நான் பேச வேண்டும், காரணம் அவர் மீது எனக்கு அவ்வளவு மரியாதை இருக்கிறது. அவரின் தம்பி நான், எனது மூத்த சகோதரனுக்காக இங்கு வாக்கு சேகரிக்க வந்துள்ளேன். மேலும் அவருக்கு வாக்குகள் சேகரித்து பேசுவதை விட அதை ஒரு பாடாலாகவே பாடுகிறேன் என்றார்.

உன்னை அறிந்தால்!, நீ அறிந்தால் உன்னை அறிந்தால்! உலககத்தில் போராடலாம் என்ற எம்.ஜி.ஆரின் பாடலைப் பாடி, இதற்கு உதாரணமாக வாழ்பவர் நமது இணை(துணை) முதல்வர், பல சாதனைகளுக்குச் சொந்தகாரர் அவர் என்று கூறினார். மேலும் 3முறை தமிழகத்தில் முதலமைச்சராக இருந்த அவருக்கு இந்த தேர்தலில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் எனக் கூறி வாக்கு சேகரித்தார்.

Tags

Next Story