தேனீக்கள் கொட்டியதில் ஒருவர் பலி - 20பேர் காயம்

தேனீக்கள் கொட்டியதில் ஒருவர் பலி - 20பேர் காயம்
X
இறந்தவருக்கு சடங்கு சம்பிரதாயம் செய்ய சென்றவர் தேனீக்கள் தாக்கி பலியான சம்பவம்.

தேனி மாவட்டம் போடி தாலுகாவிற்கு உட்பட்ட கோடாங்கிபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சீதாலட்சுமி(73.) வயோதிகத்தால் ஏற்பட்ட உடல் நலக்குறைவால் ஜனவரி 23ல் இயற்கை எய்திய சீதாலட்சுமியின் உடல் நேற்று கோடாங்கிபட்டியில் உள்ள மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில் இறந்த சீதாலட்சுமிக்கு பால் தெளிக்கும் மூன்றாம் நாள் சடங்கு செய்வதற்காக இன்று காலை உறவினர்கள் மயானத்திற்கு சென்றுள்ளனர். அப்போது மயானத்தின் தேன்கூட்டில் இருந்து படையெடுத்த ராட்சத தேனீக்கள் அங்கிருந்தவர்களைை விரட்டித் தாக்கியது. இதில் தேனீக்கள் கொட்டியதில் சுமார் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தேனீக்கள் படையெடுத்ததால் அங்கிருந்தவர்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடத் துவங்கினர்.

இவற்றில் இறந்த சீதாலட்சுமியின் சகோதரி மகனான பெயின்டர் வேலை பார்த்து வந்த ராஜா (40) என்பவர் மேல் சட்டை இல்லாமல் இருந்தததால் நூற்றுக்கணக்கான தேனீக்கள் அவரை சூழ்ந்து கடுமையாகத் தாக்கியது. இதையடுத்து காயமடைந்த அனைவரையும் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதில் சிகிச்சை பலனின்றி ராஜா பரிதாபமாக உயிரிழந்தார். இறந்தவருக்கு சடங்கு சம்பிரதாயம் செய்ய சென்றவர் தேனீக்கள் தாக்கி பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!