சுகாதார சீர்கேடு -பொதுமக்கள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை.

சுகாதார சீர்கேடு -பொதுமக்கள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை.
X
குவிந்து இருக்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு.

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் பகுதிகளில் மலைபோல் தேங்கி இருக்கும் குப்பைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

குவிந்து இருக்கும் குப்பைகளால் கொரோனோ நோய் தொற்று மட்டுமல்லாது பல்வேறு நோய்களுக்கும் பொதுமக்கள் ஆளாக வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது

போடிநாயக்கனூர் - திருமலாபுரம் செல்லும் சாலையில் உள்ள பஜார் பகுதியில் சாக்கடையிலிருந்து தூர்வாரப்பட்ட குப்பைகள் சாலை ஓரத்தில் மலைபோல் குவித்து வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அதிக அளவில் நடமாடும் இந்த முக்கிய சாலையில் குப்பை கழிவுகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தற்போது கொரோனா நோய்த்தொற்று காலத்தில் பொது மக்களின் சுகாதாரத்தை பேணிக்காக்க வேண்டிய நகராட்சி நிர்வாகமே அலட்சியமாக இருப்பது கவலை அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

Tags

Next Story
ai in future agriculture