டவ்-தே புயல் - கொட்டகுடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு - பிள்ளையார் அணை நீர்வீழ்ச்சியில் குளிக்க தடை.

டவ்-தே புயல் - கொட்டகுடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு - பிள்ளையார் அணை நீர்வீழ்ச்சியில் குளிக்க தடை.
X
குளிக்க மட்டுமில்ல,துணி துவைக்கவும் தடையாம்.

தேனி மாவட்டம், போடிநாயக்கனூரில் தொடர் மழையால் கொட்டகுடி ஆற்றில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பிள்ளையார் அணை நீர்வீழ்ச்சியில் குளிக்க தடை விதிக்கப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

' டவ் தே' புயலால் போடி பகுதியில் தொடர்ந்து கன மழையும், சாரல் மழையுமாக பெய்து வருகிறது. மலை கிராமங்களிலும் கனமழை பெய்து வருகிறது. இதனால் கொட்டகுடி ஆறு, ஊத்தாம்பாறை ஆறு, தாதனோடை ஆறு உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.


தேனி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் லேசானது முதல் கனமழை வரை பெய்து வருகிறது. இதில் ஆண்டிபட்டி, அரண்மனை புதூர், போடிநாயக்கனூர், கூடலூர், மஞ்சள் ஆறு, பெரியகுளம், பெரியார் அணை, தேக்கடி, சோத்துப்பாறை, உத்தமபாளையம், வைகை அணை, வீரபாண்டி உள்ளிட்ட பகுதிகளில் லேசானது முதல் கனமானது வரை மழை பெய்துள்ளது இதனடிப்படையில் தேனி மாவட்டத்தில் சராசரியாக 18.06 மி.மீ அளவு மழை பதிவாகியுள்ளது.

போடி கொட்டகுடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பிள்ளையார் தடுப்பணை பகுதியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. தடுப்பணை சீரமைக்கும் பணி நடைபெற்று வரும் நிலையில் தண்ணீர் படிக்கட்டு போன்ற அமைப்புகளில் பாய்ந்து செல்கிறது. இப்பகுதியில் குளிக்கவும், துணி துவைக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

போடி சரக காவல் துணை கண்காணிப்பாளர் பார்த்திபன் உத்தரவின்பேரில் , போடி நகர் காவல் நிலைய போலீஸார் இப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து சாரல் மழையும், கனமழையும் பெய்து வரும் நிலையில் வருவாய்த்துறை, காவல்துறை, தீயணைப்பு துறை உள்ளிட்ட அரசு துறைகள் சார்பில் பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டு கண்காணித்து வருகின்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!