/* */

ஆவின் பால் விலை ரூ.3 குறைப்பு இன்று முதல் அமல் பொது மேலாளர் தகவல்

தமிழக அரசின் உத்தரவின் படி தேனி மாவட்டத்தில் இன்று முதல் ஆவின் பால் லிட்டருக்கு ரு 3 குறைத்து விற்பனை செய்யப்படுவதாக பொதுமேலாளர தெரிவித்தார்

HIGHLIGHTS

ஆவின் பால் விலை ரூ.3 குறைப்பு இன்று முதல் அமல் பொது மேலாளர் தகவல்
X

தமிழக அரசு உத்தரவை தொடர்ந்து ஆவின் பால் லிட்டருக்கு ரூபாய் 3 குறைக்கப்பட்டது. இதனை செயல்படுத்தும் விதமாக இன்று முதல் தேனி மாவட்டத்தில் உள்ள ஆவின் பால் விற்பனை நிலையங்களில் லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்படுவதாக ஆவின் பால் நிலைய பொது மேலாளர் தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது,

தேனி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் நாள் ஒன்றுக்கு சுமார் ஒரு இலட்சத்து ஐந்தாயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு, உள்ளூர் விற்பனையாக சுமார் 6000 லிட்டரும் மற்றும் பால் உப பொருட்களும், நுகர்வோர்கள் பயன்பெறும் வகையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தமிழக அரசின் உத்தரவின்படி இன்று முதல் அனைத்து ஆவின் பால் வகைகளும் தற்போதைய விலையிலிருந்து ரூ.3 குறைக்கப்பட்டுள்ளது.

அதன்படி தேனி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் மூலம் விற்பனை செய்யப்படும் நிலைப்படுத்திய பால் லிட்டர் ஒன்றுக்கு அதிகபட்ச சில்லரை விற்பனை விலை ரூ.48 லிருந்து ரூ.45 ஆகவும், ஆவின் பசும்பால் ரூ.46 லிருந்து ரூ.43 ஆகவும், ஆவின் கோல்டு பால் ரூ.50 லிருந்து ரூ.47 ஆகவும் மற்றும் நிறைகொழுப்பு பால் ரூ.51 லிருந்து ரூ.48 ஆகவும் விற்பனை மேற்கொள்ளப்பட உள்ளது.

எனவே, பொது மக்கள் அனைவரும் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி ஆவின் பாலை வாங்கி பயன்பெறலாம் என்று தேனி ஆவின் பொது மேலாளர் திரு.T.R.தியானேஷ் பாபு தெரிவித்துள்ளார்.

Updated On: 16 May 2021 2:00 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. ஆரணி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் பொதுமக்களுக்கு ஓஆர்எஸ் வழங்க ஏற்பாடு
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் கோடைகால நீச்சல் பயிற்சி
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் இருந்து ஜவ்வாதுமலைக்கு இயற்கை சுற்றுலா
  5. நாமக்கல்
    ராஜவாய்க்காலில் திடீரென தண்ணீர் நிறுத்தம்; விவசாயிகள் கடும் பாதிப்பு
  6. திருவண்ணாமலை
    அருணாச்சலேஸ்வரர் கோயில் ராஜகோபுரம் முன்பு வணிக வளாக வழக்கு, சிறப்பு...
  7. நாமக்கல்
    பிரதமர் மோடி தேர்தல் பிரச்சார பேச்சைக் கண்டித்து மகளிர் காங்கிரசார்...
  8. திருவண்ணாமலை
    அருணாசலேஸ்வரா் கோவில் உண்டியல் காணிக்கை ரூ.2.23 கோடி
  9. நாமக்கல்
    நாமக்கல் அருகே பட்டப் பகலில் வீட்டுக்குள் புகுந்து ரூ. 17 லட்சம்...
  10. தமிழ்நாடு
    திருவண்ணாமலை To சென்னை கட்டணம் வெறும் ரூ.50 மட்டுமே!