அண்ணன் திமுக - தம்பி அதிமுக வேட்பாளர்களாக நேரடிப் போட்டி

அண்ணன் திமுக  - தம்பி அதிமுக வேட்பாளர்களாக நேரடிப் போட்டி
X
அண்ணன்-தம்பி உறவு வேறு, அதிமுக - திமுகவிற்கு இடையேதான் போட்டி. -ஆண்டிபட்டியில் அ.தி.மு.க வேட்பாளர் லோகிராஜன் பிரசாரம்.

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க -தி.மு.க சார்பில் உடன்பிறந்த அண்ணன் தம்பிகள் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர். அண்ணன் மகாராஜன் தி.மு.க சார்பிலும், தம்பி லோகிராஜன் அ.தி.மு.க சார்பிலும் போட்டியிடுகின்றனர்.

தி.மு.க வேட்பாளர் மகாராஜன் ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியில் பணமா? பாசமா?. பணம் என்றால் அ.தி.மு.கவிற்கு வாக்களியுங்கள், பாசம் என்றால் தி.மு.கவிற்கு வாக்களியுங்கள் என்று பிரசாரம் செய்து வருகிறார்.

அதே நேரத்தில் அ.தி.மு.க வேட்பாளர் கிராம மக்களிடையே மேற்கொண்டு வரும் பிரசாரத்தில், அண்ணன்-தம்பி உறவு எல்லாம் வேறு, போட்டி என்பது அ.தி.மு.கவிற்கும், தி.மு.கவிற்கும் தான். கட்சி ரீதியான போட்டியே தவிர, தனிப்பட்ட முறையில் லோகிராஜனுக்கும், மகாராஜனுக்கும் போட்டி இல்லை என்று மக்கள் மத்தியில் பேசினார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!