பாராளுமன்ற தேர்தலில் ஏமாற்றம்- உதயநிதிஸ்டாலின்

பாராளுமன்ற தேர்தலில் ஏமாற்றம்- உதயநிதிஸ்டாலின்
X

பாராளுமன்ற தேர்தலில் தேனி தொகுதியில் பொதுமக்கள் திமுகவுக்கு ஓட்டு போடாமல் ஏமாற்றி விட்டதாக உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் என்ற தலைப்பில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தேனி மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். அவர் பேசுகையில், பாராளுமன்ற தேர்தலில் தேனி தொகுதியில் நீங்கள் திமுகவை ஏமாற்றி விட்டீர்கள். அனைத்து பாராளுமன்ற தொகுதிகளிலும் வெற்றி பெற்றோம். ஆனால் தேனி தொகுதியில் வெற்றி பெறவில்லை. ஆனால் வரும் சட்டமன்ற தேர்தலில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும்.

நீட் தேர்வு மாணவர்களின் மருத்துவ கனவை பாதிக்கின்றது. 14 மாணவர்கள் கடந்த 3 வருடத்தில் நீட் தேர்விற்கு பயந்து தற்கொலை செய்து கொண்டனர். துணை முதல்வர் ஓபிஎஸ் பல்லாயிரம் கோடி மதிப்பில் தனது உறவினர்கள் பெயரில் சொத்து சேர்த்து வைத்துள்ளார்.சசிகலா வருகையால் ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆர் நினைவு மண்டபம், கட்சி அலுவலகத்திற்கு சீல் வைத்து விட்டனர். எதிர்கட்சியாக இருந்தாலும் ஜெயலலிதா தைரியமான முடிவு எடுக்ககூடியவர்.கைவிடப்பட்ட நெசவுப்பூங்கா திட்டம் கொண்டு வரப்பட்டு ஆண்டிபட்டி நெசவாளர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என தெரிவித்தார்.

Tags

Next Story
ai in future agriculture