போஸ்டர் அரசியலால் ஆண்டிபட்டியில் பரபரப்பு

போஸ்டர் அரசியலால் ஆண்டிபட்டியில் பரபரப்பு
X
சசிகலாவை வரவேற்று ஒட்டிய போஸ்டர்கள் மீது, தேனி எம்பி ரவீந்திரநாத்தின் பிறந்த நாள் போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர்.. இதனால் இரு தரப்பினரும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. பரபரப்பாக அப்பகுதி காணப்படுகிறது.

பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து வெளிவந்த சசிகலாவை அதிமுக கட்சியியை சேர்ந்த பலர் பல்வேறு பகுதிகளில் வரவேற்று போஸ்டர்கள் ஒட்டி வருகின்றனர். இதில் தேனி மாவட்டத்திலும் பல்வேறு பகுதிகளிலும் சசிகலாவிற்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டி வருகின்றனர். இதில் ஆண்டிபட்டி பகுதியில் போஸ்டர் அரசியல் சூடுபிடித்துள்ளது.

சசிகலாவை வரவேற்று ஆண்டிபட்டியில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு அதிமுக நிர்வாகிகள் போஸ்டர் ஒட்டியதால் அவரை கட்சியில் இருந்து நீக்கம் செய்துள்ளனர். கட்சியில் இருந்து நீக்கம் செய்தாலும் பரவாயில்லை நாங்கள் போஸ்டர் ஒட்டதான் செய்வோம் என்று அதிமுக கட்சியின் பெரியகுளம் மேற்கு ஒன்றியத்தை சேர்ந்த அம்மா பேரவை அவைத்தலைவர் வைகை சாந்தக் குமார் என்பவர் தேனி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் போஸ்டர் ஒட்டி வந்தார்.

இந்நிலையில் சசிகலாவை வரவேற்று அவர் ஒட்டிய போஸ்டர்கள் மீது அதிமுக கட்சியின் ஒன்றிய இளைஞர் பாசறை தலைவர் பாரத் தலைமையில் தேனி எம்பி ரவீந்திரநாத் பிறந்த நாளை முன்னிட்டு போஸ்டர்கள் ஒட்டினர். அதுவும் வைகை சாந்தகுமார் ஒட்டிய போஸ்டர்கள் மீது தேனி எம்பி பிறந்தநாள் வாழ்த்து போஸ்டர்களும் ஒட்டப்பட்டது. இதனை பார்த்த அமமுகவினர் போஸ்டர் ஒட்டிய அதிமுக கட்சிகாரர்களிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

இதனை சமாதானம் செய்ய காவல்துறையினர் முயற்சித்தும் பலனளிக்கவில்லை. பின்னர் சிசிகலாவை வரவேற்ற போஸ்டர் மேலேயே தேனி எம்பி ரவீந்திரநாத் பிறந்தநாள் போஸ்டர்கள் ஒட்டப்பட்டது. இதேபோல் ஆண்டிபட்டி நகரில் ஒட்டப்பட்டுள்ள சசிகலா வரவேற்பு அனைத்து போஸ்டர்களில் மீதும் தேனி எம்பி பிறந்தநாள் போஸ்டர் ஒட்டப்பட்டது. போஸ்டர் அரசியலால் ஆண்டிபட்டி பரபரப்பாகவே உள்ளது.

Tags

Next Story
ai solutions for small business