நடிகர் அஜித் பிறந்தநாள்: ஒரு ரூபாய்க்கு பிரியாணி வழங்கிய தேனி ரசிகர்
தேனி சின்னமனூரில் உள்ள உணவகத்தில் ஒரு ரூபாய்க்கு பிரியாணி வாங்க குவிந்த மக்கள்.
மே 1 ஆம் தேதி நடிகர் அஜித் பிறந்தநாள் என்பதால் அவரது ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் அவர் தற்போது நடிக்கும் படத்திற்கு விடாமுயற்சி என பெயரிடப்பட்டு அதற்கான அறிவிப்பு இன்று வெளியாகியதால் அஜிர் ரசிகர்கள் உற்சாகம் அடைந்து பல்வேறு கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
தேனி மாவட்டம் சின்னமனூரில் வீரம் என்ற பெயரில் காளிதாஸ் என்பவர் ரெஸ்டாரண்ட் ஒன்றை நடத்தி வருகிறார். இவர் நடிகர் அஜித் குமாரின் தீவிர ரசிகர் ஆவார். அஜித் 52 வது பிறந்தநாள் கொண்டாட்டத்தைத் தொடர்ந்து தேனி மாவட்டம் சின்னமனூரில் அஜித் தீவிர ரசிகர் தன்னுடைய நிறுவனமான வீரம் ரெஸ்டாரண்டில் அஜித் பிறந்தநாளை முன்னிட்டு தனது கடையில் தயாரிக்கப்படும் பிரியாணி, புரோட்டா போன்ற உணவுப் பொருட்களை ஒரு ரூபாய்க்கு வழங்கி அஜித் பிறந்தநாளை கொண்டாடினார்.
ஒரு ரூபாய்க்கு பிரியாணி மற்றும் புரோட்டா வாங்கியதால் உணவகத்தில் அதிக அளவிலான கூட்டம் அலைமோதியது. மேலும், அஜித் பிறந்த நாளான மே ஒன்றாம் தேதியில் பிறந்த 52 நபர்களுக்கு இலவசமாக பிறந்தநாள் கேக்குகளையும் வழங்கினார். தொடர்ந்து குழந்தைகளிடம் பசுமையை ஊக்குவிக்கும் வண்ணம் விதை பந்துகள் மட்டும் நோட்டுக்களை இலவசமாக வழங்கினார்.
துணிவு திரைப்படம் வெளியானதை முன்னிட்டு திரைப்படத்தைப் பார்த்து வரும் ரசிகர்கள் கொண்டு வரும் டிக்கெட்டிற்கு தனது ஓட்டலில் 50 சதவீத சலுகையும் அளித்துள்ளார்.
நடிகர் அஜித்தின் 61 வது திரைப்படமான துணிவு திரைப்படம் வெற்றி பெற தனது உணவகத்தில் 61 ரூபாய்க்கு மேல் பொருட்கள் வாங்கும் நபர்களுக்கு குலுக்கல் பரிசு போட்டி நடத்தப்பட்டு முதல் பரிசாக இருசக்கர வாகனம் , இரண்டாம் பரிசாக எல்இடி டிவி , மூன்றாம் பரிசாக வாஷிங் மெஷின் உள்ளிட்ட பொருட்கள் குலுக்கலில் தேர்வான அதிர்ஷ்டசாலிகளுக்கு வழங்கப்பட்டது . அதனை தொடர்ந்து சோபா செட், சைக்கிள், மிக்ஸி, வெட் கிரைண்டர், குக்கர் உள்ளிட்ட 61 வகையான பொருட்கள் பரிசுப் பொருள்களாக வழங்கினார்.
இதுகுறித்து அஜித் ரசிகர் காளிதாஸ் கூறியதாவது:
அஜித்தின் விடாமுயற்சி என்ற படத்தின் தலைப்பைப் போல் விடாமுயற்சியால் அஜித்தின் புகழை உலகெங்கும் பரப்புவோம். தென் தமிழகத்தில் அஜித்துக்கு என்று உருவச்சிலை வைத்துள்ளேன் என காளிதாஸ் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu