100% வாக்குப்பதிவு- விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவர்கள்

100% வாக்குப்பதிவு- விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவர்கள்
X

தேனியில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி கல்லூரி மாணவ - மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

தேனி மாவட்டத்தில் தேர்தலில் நூறு சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி இன்று கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான கிருஷ்ணனுண்ணி கொடி அசைத்து துவக்கி வைத்தார். தேனியில் உள்ள தனியார் பள்ளியில் துவங்கிய இப்பேரணியானது மதுரை சாலை, நேரு சிலை மற்றும் பெரியகுளம் சாலை என நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று கான்வென்ட் பள்ளியில் நிறைவுற்றது.இதில் எனது வாக்கு! எனது உரிமை! வாக்களிப்போம் நூறு சதவீதம் உள்ளிட்ட பதாகைகளை ஏந்தியவாறு சுமார் 100க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்றனர். இந்நிகழ்வில் பெரியகுளம் சப்கலெக்டர் சினேகா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!