தேனியில் வேலைவாய்ப்பு - உதவியாளர் மற்றும் கணிணி இயக்குபவர் பணியிடம் .

தேனியில் வேலைவாய்ப்பு -   உதவியாளர் மற்றும் கணிணி இயக்குபவர் பணியிடம்  .
X

தேனி மாவட்டத்தில், சமூக பாதுகாப்புத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் செயல்படும், தேனி மாவட்ட இளைஞர் நீதிக்குழுமத்தில் காலியாக உள்ள உதவியாளர் மற்றும் கணினி இயக்குபவர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த விண்ணப்பங்கள் வரும் 31.05.2021 மாலை 5.45-க்குள் அலுவலகத்திற்கு வந்து சேர வேண்டும். முற்றிலும் தற்காலிக அடிப்படையில் பணிநியமனம் செய்யப்பட உள்ளது.

உதவியாளர் மற்றும் கணினி இயக்குபவர் பணிக்கு விண்ணப்பிப்போர் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தட்டச்சில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் முதுநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் கணினி இயக்கத் தெரிந்திருக்க வேண்டும். 40 வயதிற்கு மேற்பட்டவர்களாக இருத்தல் கூடாது. மாத தொகுப்பூதியம் ரூ.9000 (ரூபாய் ஒன்பதாயிரம் மட்டும்) வழங்கப்படும்.

தகுதியுள்ள நபர்கள் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்துடன் வரும் 31-05-2021 அன்று மாலை 5.45 மணிக்குள் சுய விபரங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

கீழ்கண்ட முகவரிக்கு சுய விபர குறிப்புடன் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இது குறித்த மேலும் விவரங்களுக்கு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, ஒருங்கிணைந்த அரசு பல்துறை வளாகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், தேனி மற்றும் 04546 - 291919, 89031 84098 என்ற எண்களிலும் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி, தெரிவித்துள்ளார்.

Tags

Next Story