இடைக்கால கொரோனா சிகிச்சை மையம் தயார் கலெக்டர் தகவல்
தேனி மாவட்டத்தில், கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களில் சிலர் கொரோனா அறிகுறி இல்லாதவர்கள் தங்களது வீடுகளிலே தங்களை தனிமை படுத்தி கொள்ளலாம், அவ்வாறு தனிமைப்படுத்தி கொள்ள வீட்டில் வசதி இல்லாதவர்களுக்காக மாவட்ட நிர்வாகத்தின் மூலம் 20 படுக்கை வசதியுடன் கூடிய இடைக்கால கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
தேனி மாவட்டத்தில் கொரோனா தொற்று கண்டுள்ள நபர்களுக்கு சிகிச்சையளிக்கும் வகையில் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, பெரியகுளம், போடிநாயக்கனூர், கம்பம் அரசு மருத்துவமனைகள் தப்புக்குண்டு, தேக்கம்பட்டி, போடிநாயக்கனூர் பொறியியல் கல்லூரி ஆகிய இடங்களில் கொரோனா சிகிச்சை மையங்களும் வடவீரநாயக்கன்பட்டியில் சித்தா சிகிச்சை மையமும் அமைக்கப்பட்டு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நபர்களை உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஆய்வக பரிசோதனையில், கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களில் சில நபர்களுக்கு எந்தவிதமான கொரோனா தொற்று அறிகுறிகள் இல்லாமல் உள்ளனர். இவர்களை தமது வீடுகளில் தனிமைப்படுத்துதல் ஏற்படுத்திக்கொள்ளவும் பொதுசுகாதாரத்துறையின் களப்பணியாளர்கள் மூலம் மருந்துகள் வழங்கப்பட்டு தொடர் கண்காணிப்பில் உள்ளனர். தொற்று கண்டுள்ள நபர்களில் சில நபர்களுக்கு தமது வீடுகளில் தனிமைப்படுத்திக்கொள்ள இடவசதி இல்லையெனில், இவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சையளிக்கும் வகையில், மாவட்டத்தில் 20 படுக்கை வசதியுடன் கூடிய இடைக்கால கொரோனா சிகிச்சை மையம், தேவதானபட்டி, ராஜதானி, கடமலைக்குண்டு, வீரபாண்டி, ஓடைப்பட்டி, தேவாரம், கூடலூர் மற்றும் டொம்புச்சேரி ஆகிய 8 சமுதாய சுகாதார மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, அறிகுறிகள் காணப்படாத கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள கர்ப்பிணிகளில் எதிர்பார்க்கப்படும் பிரசவ தேதிக்கு 10 நாட்களுக்கு முன் பராமரிப்பதற்கு டொம்புச்சேரி சமுதாய சுகாதார நிலையத்தில் 20 படுக்கை வசதிகளுடன் கூடிய சிகிச்சை மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள கர்ப்பிணிகளில் சுகப்பிரசவம் டொம்புச்சேரி சுகாதார மையத்திலும் பிரசவத்திற்கு அறுவை சிகிச்சை தேவைப்படும் கர்ப்பிணிகளை தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு உடனடியாக அனுப்பிவைக்க அனைத்து நடவடிக்கைகளும் செய்யப்பட்டுள்ளது என கலெக்டர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu