கொரோனா விழிப்புனர்வு - டி.ஐ.ஜி பங்கேற்பு

கொரோனா விழிப்புனர்வு - டி.ஐ.ஜி பங்கேற்பு
X
கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகள்..

தேனி மாவட்டம் போடி நாயக்கனூர் பகுதியில் போடி சரக காவல் துணை கண்காணிப்பாளர் பார்த்திபன் அறிவுறுத்தலின் பேரில் பொதுமக்களிடையே கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் போடி நகர் காவல் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திண்டுக்கல் சரக காவல்துறை துணைத்தலைவர் முத்துச்சாமி கலந்துகொண்டு பொதுமக்களுக்கு கபசுர குடிநீர், முகக் கவசம் உள்ளிட்டவற்றை வழங்கினார். மேலும் பொதுமக்கள் கொரோனாவில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ளும் விதமாக மூலிகை நீர் அடங்கிய நீராவி பிடிக்கும் இயந்திரங்களை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய் சரண் தேஜஸ்வி, போடி சரக காவல் துணை கண்காணிப்பாளர் பார்த்திபன், நகர் காவல் நிலைய ஆய்வாளர்கள் சரவணன், முத்துக்குமார் மற்றும் காவல்துறையினர் உடன் இருந்தனர்

Tags

Next Story
ai in future agriculture