எல்லோரும் என் தாத்தா போல் ஆக முடியாது-எம்ஜிஆர் பேரன் பேட்டி

எல்லோரும் என் தாத்தா போல் ஆக முடியாது-எம்ஜிஆர் பேரன் பேட்டி
X

எல்லோரும் எம்.ஜி.ஆராக ஆக முடியாது என எம்ஜிஆரின் பேரன் தேனியில் கூறினார்.

முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் தத்தெடுத்து வளர்த்த சுதா விஜயக்குமாரின் மகன் ராமச்சந்திர ரவி. இவர் இன்று தேனியில் நிருபர்களிடம் கூறியதாவது: சட்டமன்ற தேர்தலில் ஆண்டிபட்டி, பல்லாவரம், ஆலந்துார் சட்டமன்ற தொகுதிகளுக்கு அ.தி.மு.க., தலைமையிடம் விருப்ப மனு அளித்தேன். வேட்பாளர் பட்டியலில் என்னுடைய பெயர் இல்லை. அதனால் ஒன்றும் இல்லை. இவ்வளவு நாள் கட்சிக்காக பணியாற்றியவர்களுக்கு தற்போது வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

அ.தி.மு.க, என் தாத்தா உருவாக்கிய கட்சி. இரட்டை இலை எங்கு இருக்கிறதோ அங்கு தான் நான் இருப்பேன். இந்தக் கட்சிக்காக உழைப்பதற்கு கடைக்கோடி தொண்டனாக எப்போதும் நான் தயாராக இருப்பேன். தேனி மாவட்டத்தில் எனக்கு பத்தாயிரம் ரசிகர்கள் உள்ளனர். அவர்கள் என்னை சந்திக்க வேண்டும் என ஆசைப்பட்டனர். அதனால் நேரில் சந்திக்க இங்கு வந்தேன்.

எம்.ஜி.ஆர் - ஜெயலலிதாவை ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்.உடன் ஒப்பிட வேண்டாம். எம்.ஜி.ஆர்., போல் செய்வதற்கு யார் வந்தாலும், அவர்கள் எல்லோரும் எம்.ஜி.ஆராக ஆக முடியாது. ஆண்டிபட்டி தொகுதிக்கு சீட் கொடுக்காதது வருத்தம் அளித்தாலும், ஓ.பி.எஸ்., கட்சியில் இளைஞரணி பொறுப்பு வழங்குவதாக தெரிவித்துள்ளார். விஜயகாந்த்தை கறுப்பு எம்.ஜி.ஆர். என கூறிவிட்டு, அ.தி.மு.க.,வை வசைபாடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.

Tags

Next Story
ai marketing future