ராட்சத பலூன் பறக்கவிட்டு தேர்தல் விழிப்புணர்வு

ராட்சத பலூன் பறக்கவிட்டு தேர்தல் விழிப்புணர்வு
X

தேனியில் நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி பொதுமக்களிடம் தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ராட்சத பலூன் பறக்கவிடப்பட்டது.

தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வருகின்றது.‌ மேலும் வாக்களிப்பதன் அவசியத்தையும், உரிமையையும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக பல்வேறு நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன. அந்த வகையில் தேனி மாவட்டத்தில் நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி இன்று ராட்சத பலூன் பறக்கவிடப்பட்டது.

தேனி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள தனியார் தங்கும் விடுதியின் நான்காவது மேல் மாடியில் அமைக்கப்பட்டுள்ள வண்ண பலூனை தேனி கலெக்டர் கிருஷ்ணனுண்ணி பறக்க விட்டார். எனது வாக்கு! எனது உரிமை! ஏப்ரல்6 - 2021 என்று அச்சிடப்பட்டிருந்த அந்த பலூன் தேனி நகரின் மையப்பகுதியில் பறக்க விடப்பட்டுள்ளன.‌ இந்நிகழ்வில் தேனி மாவட்ட எஸ்பி., சாய்சரண் தேஜஸ்வி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil