வாக்குப்பதிவு இயந்திரங்கள் குலுக்கல் முறையில் ஒதுக்கீடு
கம்ப்யூட்டர் மூலம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யும் முதற்கட்ட பணி தேனியில் நடைபெற்றது.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்-2021 நடைபெறவுள்ளதையொட்டி, சட்டமன்ற தொகுதிகளில் வாக்குச்சாவடி வாரியாக பயன்படுத்தப்பட வேண்டிய வாக்குப்பதிவு இயந்திரங்களை கம்ப்யூட்டர் மூலம் குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யும் முதற்கட்ட பணி தேனி மாவட்ட கலெக்டர் / மாவட்ட தேர்தல் அலுவலர் கிருஷ்ணனுண்ணி தலைமையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் இன்று (5 ம் தேதி) நடைபெற்றது.
தேனி மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட 1,561 வாக்குச்சாவடி மையங்களுக்கு 1,875 கட்டுப்பாட்டு கருவியும், 1,875 வாக்குப்பதிவு இயந்திரங்களும் , மற்றும் வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதனை உறுதி செய்யும் கருவியான 2,000 விவிபேட் இயந்திரங்களும் என மொத்தம் 5,750 கருவிகள் மற்றும் இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அது போக கூடுதல் இயந்திரங்களும் ஒதுக்கப்பட்டுள்ளது.இந்நிகழ்வின் போது, டிஆர்ஓ ரமேஷ், ஒருங்கிணைப்பு அலுவலர் (மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்) தியாகராஜன், பெரியகுளம் சப்கலெக்டர் சிநேகா, அனைத்துக்கட்சி பிரமுகர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu