சொத்துக்களை மீட்க தனி வாரியம்- செட்டியார்கள் பேரவை

சொத்துக்களை மீட்க தனி வாரியம்- செட்டியார்கள் பேரவை
X

அபகரிக்கப்பட்ட செட்டியார்களின் சொத்துக்களை மீட்பதற்கு அரசு தனி வாரியம் அமைக்க வேண்டும் என தேசிய செட்டியார்கள் பேரவை கோரிக்கை விடுத்துள்ளது.

தேசிய செட்டியார்கள் பேரவையின் மாநாடு வரும் 27ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. இது தொடர்பான ஆலோசனை கூட்டம் தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு வருகை தந்த தேசிய செட்டியார்கள் பேரவையின் நிறுவன தலைவர் ஜெகநாத் மிஸ்ரா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,

தமிழகத்தில் உள்ள ஏறக்குறைய 100 க்கும் மேற்பட்ட செட்டியார் சமூக உட்பிரிவுகளை சேர்ந்த சுமார் 10 லட்சம் பேர் வரை மாநாட்டில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கின்றோம். அபகரிக்கப்பட்ட செட்டியார்களின் சொத்துக்களை மீட்பதற்கு அரசு தனி வாரியம் அமைக்க வேண்டும் என்பதே மாநாட்டின் பிரதான கோரிக்கையாகும். இதற்கு அடுத்தபடியாக தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்படும் வியாபார கடன்களில் மகளிருக்கு 50 விழுக்காடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட உள்ளதாக தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர் கடந்த 11 ஆண்டுகளாக அதிமுகவை ஆதரித்து வரும் தேசிய செட்டியார்கள் பேரவை, வருகின்ற தேர்தலிலும் அக்கட்சியையே ஆதரிக்கும் சூழலில் இருக்கின்றோம். செட்டியாருக்கு அதிக பிரதிநிதித்துவம் கொடுக்கின்ற கட்சியாக இருக்கிற அதிமுக, வருகின்ற சட்டமன்ற தேர்தலில் முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் வாய்ப்பு அளிப்பார்கள் என்று நம்புவதாக கூறினார்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!