கொத்தடிமைகளாக இருந்த குழந்தை தொழிலாளர்கள் மீட்பு

கொத்தடிமைகளாக இருந்த குழந்தை தொழிலாளர்கள் மீட்பு
X

தேனி மாவட்டம் சின்னமனூரில் கொத்தடிமைகளாக பணியமர்த்தப்பட்டிருந்த குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர்.

தேனி மாவட்டம் சின்னமனூரில் உள்ள உணவகங்கள், ஜவுளிக்கடை மற்றும் கனரக தொழிற்கூடங்கள் உள்ளிட்ட பகுதிகளில் குழந்தைகள் நலக்குழுவினர்நடத்திய ஆய்வில் ஒரு சிறுமி உள்பட, 6 சிறார்கள் பணியமர்த்தப்பட்டிருப்பது கண்டறியப்பட்டன. அவர்களை மாவட்ட குழந்தைகள் நலக்குழு தலைவர் சுரேஷ்குமார் தலைமையில், சைல்டு லைன், சமூக நலம், தொழிலாளர் நலம் மற்றும் காவல்துறையினர் மீட்டனர்.

அவர்களிடம் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், 17 வயதுக்கு மேற்பட்ட இரண்டு சிறார்கள் கனரக தொழிற்கூடங்களிலும், 17வயது சிறுமி ஒருவர் பலசரக்கு கடையிலும், மற்றும் பிற கடைகளில் 14 வயதிற்கு கீழ் உள்ள 4 பேர் கொத்தடிமைகளாக நடத்தப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து சிறார்களை பணியமர்த்திய உரிமையாளர்கள் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட குழந்தைகள் நலக்குழு தலைவர் சுரேஷ்குமார் தெரிவித்தார். மேலும் பாதிக்கப்பட்டவர்கள் விருப்பத்தின் பேரில் அவர்கள் கல்வி தொடர நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனக் கூறினார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!