தேனி: சாலைப் பாதுகாப்பு வார விழா

தேனி: சாலைப் பாதுகாப்பு வார விழா
X
சாலை பாதுகாப்பு வார விழாவை ஒட்டி தேனி மாவட்டத்தில் உள்ள மலைச்சாலைகளில் பயணிக்கும் வாகன ஓட்டுநர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திய காவல்துறையினர்.

தமிழகத்தில் 32வது சாலை பாதுகாப்பு வாரம் கடந்த ஜனவரி 18முதல் பிப்ரவரி 17வரை கடைபிடிக்கப்படுகிறது. இந்த விழாவில், பொதுமக்களிடையே சாலைவிதிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தப்படும். இந்நிலையில் தமிழக - கேரள எல்லையில் அமைந்துள்ள தேனி மாவட்டத்தில் ஜீப் ஓட்டுநர்களிடம் காவல்துறையினர் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

கேரளாவில் உள்ள தோட்ட வேலைகளுக்கு தேனி மாவட்டத்தில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை அழைத்துச் செல்லும் பணியில் நூற்றுக்கணக்கான ஜீப் டிரைவர்கள் ஈடுபட்டுள்ளனர். மலைப்பகுதிகளில் வாகனங்களில் ஆட்களை வேலைக்கு ஏற்றிச் செல்லும்போது சாலை விதிமுறைகளுக்கு உட்பட்டு ஆட்களை ஏற்றிச்செல்ல வேண்டும், விபத்தில்லாத பாதுகாப்பான சாலை பயணம் தொடர்ந்திடுவோம், என்ற உறுதிமொழியை வாகன ஓட்டிகளையும், பொதுமக்களையும் எடுக்க வைத்து காவல்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். மேலும் சாலை பாதுகாப்பு குறித்த துண்டுப் பிரசுரங்களும் விநியோகம் செய்யப்பட்டது.‌

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி கம்பம் அருகே உள்ள கம்பம் மெட்டு, மற்றும் போடி அருகே உள்ள போடி மெட்டு ஆகிய பகுதிகளில் நடைபெற்றது.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil