தொடரும் சசிகலா ஆதரவு போஸ்டர்கள்

தொடரும் சசிகலா ஆதரவு போஸ்டர்கள்
சசிகலாவை வரவேற்று போஸ்டர் ஒட்டியவர்களை அதிமுக கட்சியிலிருந்து தலைமை கழகம் நீக்கி வரும் நிலையில், தேனி பெரியகுளம் அருகே ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சொத்து குவிப்பு வழக்கில் 4ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று பெங்களூரு பார்ப்பன அக்ரஹார சிறையில் இருந்து வந்த சசிகலா கொரோனா தொற்றால் பாதிப்படைந்து விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் கொரோனா தொற்று குறைந்ததன் காரணமாக நேற்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட சசிகலா வரும் 5 ஆம் தேதி தமிழகம் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. சசிகலா விடுதலையானதை வரவேற்று அதிமுக பிரமுகர்கள் சிலர் பல்வேறு பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டி வருகின்றனர்.

இதில் தேனி மாவட்டம் பெரியகுளம் மேற்கு ஒன்றிய அம்மா பேரவை அவைத்தலைவர் வைகை சாந்தகுமார் என்பவர், சசிகலாவை வரவேற்று போஸ்டர்களை ஒட்டியுள்ளார். அந்த போஸ்டரில் "எங்கள் குலசாமியே!தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற தீயாக வரும் தியாகத் தலைவி சின்னம்மா அவர்களே!! வருக... வருக" என்ற வாசகங்கள் அடங்கிய வரவேற்பு பேஸ்டர்கள் தேனி நகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் ஒட்டப்பட்டுள்ளது.

சசிகலாவை வரவேற்று போஸ்டர் ஒட்டிய அதிமுகவினரை அக்கட்சியிலிருந்து தலைமை கழகம் நீக்கி வரும் நிலையில் தேனியில் அதிமுக பிரமுகர் சசிகலாவிற்கு ஆதரவாக ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags

Next Story