தேனியில் விவசாய சங்கத்தினர் பைக் பேரணி

தேனியில் விவசாய சங்கத்தினர் பைக் பேரணி
X

புதிய வேளாண் சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தேனியில் விவசாய சங்கத்தினர் பைக் பேரணி நடத்தினர்.

மூன்று புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி டெல்லியில் இன்று தடையை மீறி விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்தி வருகின்றனர். விவசாயிகளுக்கு ஆதரவாக இந்தியா முழுவதும் டிராக்டர் ஊர்வலம் நடத்த எதிர்க்கட்சிகள் திட்டமிட்டனர்.இந்நிலையில் தேனியில் ஏஐடியூசி மாநில துணை தலைவர் சுந்தர்ராஜன் தலைமையில் இடதுசாரிகள், திமுக மற்றும் அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து இரு சக்கர வாகன பேரணி நடைபெற்றது.

தேனி பெரியகுளம் சாலையில் துவங்கி, பழைய பேருந்து நிலையம் வழியாக மதுரை சாலையில் சென்று பங்களாமேடு பகுதியில் பேரணி நிறைவடைந்தது. இதில் சுமார் 200க்கும் மேற்பட்டோர் இரு சக்கர வாகனங்களில் ஊர்வலமாக சென்றனர்.‌பின்னர் பங்களாமேடு திடலில் தேசியக்கொடியினை ஏற்றியும் புதிய வேளாண் சட்டத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்றும், போராட்டக்காரர்கள் கண்டன கோஷங்களை எழுப்பி வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பை தெரிவித்தனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!