தேனி : சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல், காவலருக்கு 5 ஆண்டு சிறை

தேனி : சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல், காவலருக்கு 5 ஆண்டு சிறை
X

சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக தொடரப்பட்ட வழக்கில் சிறப்பு சப்இன்ஸ்பெக்டருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து தேனி மாவட்ட மகிளா நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.

கடந்த 2018ம் ஆண்டு கம்பம் போக்குவரத்து காவல் நிலையத்தில் சிறப்பு சப்இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் பாவாசிக்கந்தர். இவர் வீரபாண்டியில் உள்ள காவலர் குடியிருப்பில் குடியிருந்து வந்தார்.அப்பொழுது அப்பகுதியைச் சேர்ந்த ஒரு சிறுமிக்கு சாக்லேட் வாங்கி கொடுத்து பிடித்தமான அனைத்து பொருட்களும் வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி அந்த சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தினாராம்.இது குறித்து அந்த சிறுமி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். அதிர்ச்சியடைந்த அந்த சிறுமியின் பெற்றோர் வீரபாண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.புகாரைப் பெற்றுக் கொண்ட வீரபாண்டி காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணை அடிப்படையில் பாவாசிக்கந்தர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரைக் கைது செய்தனர்.

இது தொடர்பான வழக்கு தேனி மாவட்ட அனைத்து மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் நேற்று நடைபெற்ற இறுதி விசாரணையில் குற்றம் சாட்டப்பட்ட பாவாசிக்கந்தர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் அபராதத் தொகையை கட்டத்தவறினால் மேலும் 6 மாதம் மெய்க்காவல் தண்டனையும் வழங்கி நீதிபதி வெங்கடேசன் பரபரப்பு தீர்ப்பு வழங்கினார்.தீர்ப்பின் அடிப்படையில் பாவா சிக்கந்தர் பெரியகுளம் அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்கு பின் சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!