உரிய நேரத்தில் பிரச்சாரத்தை துவக்குவேன்: துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்

உரிய நேரத்தில் பிரச்சாரத்தை துவக்குவேன்: துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்
X

உரிய நேரத்தில் உரிய முறையில் என்னுடைய தேர்தல் பிரசாரத்தை துவக்குவேன் என தேனியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டியின் போது கூறினார்.

தேனியில் இன்று நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு வருகை தந்த துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நலத்திட்ட உதவிகள் வழங்கி முடித்த பின் செய்தியாளர்களை சந்தித்தார் அப்பொழுது,நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப்போவதில்லை என்று அறிவித்திருப்பது பற்றி கேட்டபோது,மரியாதைக்குரிய சிறந்த நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அறிவித்திருந்தார் நான் அதை வரவேற்று இருந்தேன். இப்பொழுது உடல் நலம் கருதி அவர் அரசியலில் ஈடுபடப் போவதில்லை என்று தற்போது அறிவித்திருக்கிறார். அவர் நீண்ட ஆயுளுடன் உடல் நலத்துடன் நீடுழி வாழ வாழ்த்துகிறேன் என்று கூறினார்.

தேர்தல் பிரச்சாரத்தை எப்போது தொடங்குவீர்கள் என்ற கேள்விக்கு ,உரிய நேரத்தில் உரிய முறையில் என்னுடைய தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குவேன் என்று தெரிவித்தார்.முதல்வர் வேட்பாளர் யார் என்பதை பாஜக மேலிடம் அறிவிக்கும் என பா.ஜ.க. கூறி வருவது பற்றி கேட்ட போது, இது குறித்து எங்களது கருத்தை ஏற்கனவே சொல்லி விட்டோம் என்று தெரிவித்தார்.

Tags

Next Story